நீச்சலால் சருமம் கருமையாகுமா?

Published By: Digital Desk 7

27 Sep, 2022 | 04:47 PM
image

நீச்சல் குளத்தில் நீச்சலை மேற்கொண்டால், அது சருமத்தின் நிறத்தை மாற்றிவிடும். ஏனென்றால், சில நீச்சல் குளங்கள் திறந்த வெளியில் இருப்பதால் சூரியக்கதிர்கள் சருமத்தை தாக்கி, சருமத்தின் நிறத்தை கருமையாக்கிவிடுகின்றன. 

நீச்சல் குளத்தில் நீச்சலை மேற்கொண்ட பின்னர், ஒருசில செயல்களை பின்பற்றினால் சரும நிறத்தை பாதுகாக்கலாம். இல்லாவிட்டால், சருமத்தில் அரிப்புகள் ஏற்பட்டு, சிவந்து, அலர்ஜி ஆகிவிடும். 

பொதுவாக கோடையில் சரும நிறம் மாறுவது சாதாரணம்தான். ஆனால், நீச்சல் மேற்கொண்டால், சருமத்தின் நிறம் மாறும் என்று சொன்னால், ஆச்சரியமாகத்தான் இருக்கும். இங்கு நீச்சல் குளத்தில் நீச்சலை மேற்கொண்டால், எப்படி சருமத்தின் நிறம் மாறும் மற்றும் அப்படி சருமத்தின் நிறம் மாறாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமென்பதை பற்றி பார்ப்போமா!

திறந்தவெளி நீச்சல் குளம்

அனைத்து நீச்சல் குளங்களுமே வெயிலின் தாக்கம் இல்லாதவாறு மூடி இருப்பதில்லை. சில நீச்சல் குளங்கள் திறந்தவெளியில் இருக்கும். இதனால் சூரியக்கதிர்களின் தாக்கமானது சருமத்தில் நேரடியாக பட்டு, சருமத்தின் நிறத்தை மாற்றிவிடும். ஆகவே, நீச்சல் செய்யும் முன், இதமான க்ரீமை தடவிக்கொண்டால், சூரியக்கதிர்களின் தாக்கத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்கலாம். 

க்ளோரின்

அனைத்து நீச்சல் குளங்களிலும் நீரை சுத்தமாக வைத்துக்கொள்ள க்ளோரின் பயன்படுத்தப்படும். ஆனால், அந்த க்ளோரின் சருமத்துக்கு மிகவும் தீங்கை விளைவிக்கும். அதிலும் சரும வறட்சி, சருமத்தின் நிறத்தை மாற்றுவது என்று பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். 

சுத்தமான நீரில் குளிக்கவும் 

நீச்சல் குளத்தில் இருந்து வெளியே வந்த பின்னர், நல்ல சவர்க்காரத்தை பயன்படுத்தி, சுத்தமான நீரால் உடலை நன்கு கழுவினால், சருமத்தில் க்ளோரினால் ஏற்படும் பாதிப்புக்களை தடுக்கலாம். 

மொய்ஸ்சுரைசர் 

பொதுவாக குளித்து முடித்த பின்னர், சருமமானது உடலில் உள்ள நீரை உறிஞ்சிவிடும். ஆகவே, நல்ல தரமான எண்ணெய்ப் பசை அதிகமுள்ள மொய்ஸ்சுரைசரை பயன்படுத்த வேண்டும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்