கவனம் தேவை !

Published By: Digital Desk 7

27 Sep, 2022 | 12:49 PM
image

கேள்வி: 

நான் ஒரு பெண். எனக்கு வயது 23. திருமணம் முடிந்து 4 வருடங்கள் ஆகின்றது. இன்னும் குழந்தைப் பாக்கியம் இல்லை. என்னுடைய பிரச்சினை என்னவெனில், எனது மார்பு ஓரளவு பெரிதாக சாதாரணமாக காணப்படுகிறது. ஆனாலும், இன்னும் எனது மார்பில் முலைக்காம்பு சிறிதளவேனும் இல்லை. கருவளையம் மட்டுமே காணப்படுகிறது. இதற்கும் குழந்தைப் பாக்கியமின்மைக்கும் ஏதாவது தொடர்புண்டா? இதற்கு ஏதாவது மருத்துவத் தீர்வு உண்டா? கர்ப்பமானால், இதனால் ஏதும் பிரச்சினையாகுமா?

பதில்: 

உங்களுக்கு மிக முக்கியமான பிரச்சினை குழந்தையின்மையே. அதற்குப் பிறகு தான் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பிரச்சினை.

திருமணத்துக்குப் பின், சடுதியாக காம்புகள் வெளித்தெரிய மாட்டாது. திருமணமாகி நான்கு வருடங்களாகியும் பிரச்சினை தொடர்கிறது என்றால் அதற்கு மருத்துவ ரீதியான காரணங்கள் எதுவும் இருக்க முடியாது. உடலுறவுச் செயற்பாட்டில் ஏதோ சிக்கல் அல்லது குறைபாடு இருப்பதாகவே இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

குழந்தையின்மைக்கும் இதற்கும் எந்தவித தொடர்புமில்லை. ஆனால், இந்தப் பிரச்சினை உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டியதே! காரணம், முலைக்காம்புகள் சீராக வெளிப்படாத (வெளிப்படுத்தப்படாத) நிலையில், உங்களுக்கு பிள்ளை பிறந்ததும், அது பால் அருந்தச் சிரமப்படும். எனவே, பாலுறவுச் செயற்பாட்டில் சற்று கவனம் எடுப்பது நன்று.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right