வடிகான்களைப் போன்று காட்சியளிக்கும் வீதி : வாக்குறுதியை நிறைவேற்றாத அரசியல்வாதிகள் - மக்கள் அசௌகரியம்

Published By: Digital Desk 5

27 Sep, 2022 | 12:41 PM
image

(க.கிஷாந்தன்)

அக்கரப்பத்தனை - மோர்சன் தோட்டத்திற்கு செல்லும் ஆறு கிலோமீட்டர் தூரம் கொண்ட பிரதான வீதியானது, 30 வருடங்களாக புனரமைப்பு செய்யாத காரணத்தினால் வடிகான்களைப் போன்று காட்சியளிக்கின்றது.

மழைக்காலங்களில் இப்பாதையில் பயணிக்க முடியாத நிலையில் குன்றும் குழியுமாக காணப்படுவதுடன் வெள்ளம் வழிந்துச் செல்லும் நீரோடை போன்று காணப்படுகின்றது.

500க்கும் மேற்பட்ட மக்கள், பாதையை பயன்படுத்தி வரும் நிலையில், 80க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணிகள் வாகன வசதிகள் இல்லாமல் நடந்து செல்லுகின்றனர்.

வீதி புனரமைப்பு செய்யப்படாமையால், எந்தவொரு வாகனமும்  இவ்வீதியில் பயணிப்பதில்லை. எனினும் மிகவும் கஸ்டத்தின் மத்தியில் ஓட்டோக்கள் அதிக பணத்தை வசூலித்து பயணிக்கின்றன.

வீதியை  சீர்திருத்தம் செய்து தருவதாக கூறி அரசியல்வாதிகள், வாக்குகளைப் பெற்றாலும் இன்னும் அரசியல்வாதிகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

இதேவேளை,  10 வருடங்களுக்கு முன்பு இப்பாதையின் ஊடாக சென்ற வான் ஒன்று, 60 அடி பள்ளத்தில் விபத்துக்குள்ளானது இதன்போது மூவர் இறந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வலியுறுத்திய விடயங்கள் வரவு - செலவுத்...

2025-02-08 16:55:07
news-image

சட்டமா அதிபருக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிப்பது...

2025-02-08 16:54:04
news-image

மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசியல்...

2025-02-08 17:10:39
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை செயற்படுத்த...

2025-02-08 16:53:41
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக் கொள்ள...

2025-02-08 15:46:50
news-image

பாடசாலை அதிபரை கடத்திச் சென்று தாக்கி...

2025-02-08 17:33:13
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக்கொள்ள முடியாது...

2025-02-08 23:30:32
news-image

நுவரெலியா - தலவாக்கலை மார்க்கத்தில் ஈடுபடும்...

2025-02-08 17:12:01
news-image

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் பிரதமர் ஹரிணியை சந்தித்து...

2025-02-08 14:53:14
news-image

பொலன்னறுவையில் விபத்து ; ஒருவர் பலி...

2025-02-08 16:36:31
news-image

மாத்தறையில் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

2025-02-08 16:17:24
news-image

வட்டுக்கோட்டை துணைவி பிரகேதீஸ்வரர் ஆலயத்தினை மீள்...

2025-02-08 15:46:12