ஊட்டியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சேவல் கொண்டை மலர்கள்

By Digital Desk 5

27 Sep, 2022 | 12:33 PM
image

சுற்றுலா பயணிகளை கவரும் சேவல் கொண்டை மலர்கள் நீலகிரியில் பல இடங்களில் பூத்துள்ளதால், சுற்றுலா பயணிகள் அதனை கண்டு ரசித்து செல்கின்றனர். 

சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை வரவேற்கவும், மகிழ்விக்கவும் பூங்காக்களில் மலர் செடிகளால் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன.

இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலனவர்கள் இயற்கை அழகை காணவே விருப்பப்படுகின்றனர். 

தற்போது கீழ்கோத்தகிரி, எப்பநாடு மலைச்சரிவுகள் மற்றும் கல்லட்டி சோலாடா பகுதிகளில் குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளது. இதனை காண நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். 

தற்போது நீலகிரி மாவட்டத்தில் சேவல் கொண்டை மலர்கள் பூக்கும் சீசன் என்பதால், சாலையோரங்களில், பூங்காக்களில் வைக்கப்பட்டுள்ள இந்த மரங்களில் சிவப்பு நிறத்தில் மலர்கள் பூத்து குலுங்குகிறது. பூக்கள் பூத்து மரம் முழுக்க சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. இந்த மரங்களில் இருந்து சாலைகளில் விழும் மலர்களும் அழகாக காட்சியளிக்கிறது.

தற்போது ஊட்டி அருகேயுள்ள இடுஹட்டி செல்லும் சாலையில் பூத்துள்ள இந்த மலர்களை உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தாயில்லா ஆட்டுக் குட்டிகளுக்கு தாயாக மாறி...

2022-11-30 20:56:56
news-image

3 கிலோ தலைமுடியை உட்கொண்ட சிறுமி...

2022-11-30 11:47:48
news-image

தேவாலயமொன்றின் அனைத்து பிக்குகளும் போதைப்பொருள் சோதனையில்...

2022-11-30 10:17:35
news-image

எகிப்தில் தங்க நாக்கு கொண்ட மம்மிகள்...

2022-11-29 17:30:21
news-image

ஓநாய் போன்று காட்சியளிக்கும் இளைஞன் -...

2022-11-29 14:48:10
news-image

நபரின் வயிற்றிலிருந்த 187 நாணயங்களை அறுவை...

2022-11-29 13:19:19
news-image

அவுஸ்திரேலிய கடற்கரையில் நிர்வாணமாக திரண்ட கூட்டம்...

2022-11-27 15:57:42
news-image

140 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டறியப்பட்ட பறவை...

2022-11-28 09:09:26
news-image

உல்லாசக் கப்பலிலிருந்து கடலில் வீழ்ந்த இளைஞர்...

2022-11-26 19:50:58
news-image

வரலாற்றில் இன்று - மிரபால் சகோதரிகள்...

2022-11-25 13:00:05
news-image

195 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டதாக...

2022-11-24 18:27:49
news-image

 உலகின் வயதான பூனை : கின்னஸ்...

2022-11-24 17:31:12