ஜப்பானின் முன்னாள் பிரதமர் சின்சோ அபேயின் அரச இறுதிச் சடங்கு இன்று (27) அந்நாட்டு நேரப்படி 14:00 மணிக்கு (இலங்கை நேரம் 5.30) இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், சின்சோ அபேயின் மனைவி அகி அபே துணியால் மூடப்பட்ட அஸ்தியை எடுத்துக்கொண்டு புடோகனுக்கு வந்தார்.
மத்திய டோக்கியோவில் உள்ள புகழ்பெற்ற விளையாட்டு மற்றும் கச்சேரி அரங்கான நிப்பான் புடோகானில் நடைபெறவுள்ள இறுதிச் சடங்கில் சுமார் 4,300 விருந்தினர்கள் கலந்துகொள்ளவுள்ளார்கள்.
1,000 வீரர்கள் வரை சம்பிரதாயப் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள், முன்னாள் பிரதமருக்கு மரியாதை செலுத்தும் முகமாக பீரங்கியில் இருந்து 19 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்படவுள்ளது.
அபேயின் இறுதி சடங்கு நடைபெறும் அரங்கிற்கு வெளியே இன்று காலை ஆயிரக்கணக்கானோர் வரிசையில் நின்று மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
50 நாடுகளின் தலைவர்கள் உட்பட 700க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றுள்ளனர்.
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், வியட்நாம் ஜனாதிபதி நுயென் சுவான் ஃபூக், தென் கொரிய பிரதமர் ஹான் டக்-சூ, பிலிப்பைன்ஸ் துணை ஜனாதிபதி சாரா டுடெர்டே-கார்பியோ, இந்தோனேசியா துணைத் தலைவர் மரூஃப் அமீன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் உட்பட 50 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஆனால் ஜப்பானில் சுமார் 60 சதவீத மக்கள் அரச இறுதிச் சடங்கை ஆதரிக்கவில்லை என தெரிவித்துள்ள நிலையில் போராட்டங்களையும் முன்னெடுத்தனர்.
பாராளுமன்றத்தின் அனுமதியைக் கூட பெறாமல், இந்த நிகழ்விற்காக அரசாங்கம் சுமார் 12 மில்லியன் டொலர் வரி செலுத்துவோர் பணத்தை செலவிட்டதாக பலர் ஆத்திரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM