ஜப்பானின் முன்னாள் பிரதமர் சின்சோ அபேயின் இறுதிச் சடங்கு ; எதிர்ப்புப் போராட்டம்

Published By: Digital Desk 3

27 Sep, 2022 | 11:05 AM
image

ஜப்பானின் புடோகன் அரங்கை சுற்றியுள்ள பகுதிகளில் ஒன்று கூடிய போராட்டக்காரர்கள் முன்னாள் பிரதமர்  சின்சோ அபேயின் இறுதிச் சடங்கு நிகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

ஜப்பான் வரலாற்றில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் சின்சோ அபே (வயது 67).

கடந்த 2020 ஆம் ஆண்டு பதவி விலகிய அவர், கடந்த ஜூலை மாதம் 8 ஆம் திகதி அங்கு நரா என்ற இடத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவரை டெட்சுய யமகாமி என்பவர் சுட்டுக்கொன்றார். அபேயின் கொலை ஜப்பான் மட்டுமின்றி அகில உலகிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சின்சோ அபேயின் இறுதிச்சடங்கு கடந்த 12 ஆம் திகதி டோக்கியோவில் இடம்பெற்றது. அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. 

இந்த நிலையில் சின்சோ அபே நினைவு நிகழ்வுகள் அந்த நாட்டின் அரசு சார்பில் இன்று டோக்கியோவில் நடத்தப்படுகிறது. 

இதில் பங்கேற்க இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது.

ஜப்பானின் அழைப்பை ஏற்று, சின்சோ அபேயின் நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜப்பான் புறப்பட்டு டோக்கியோ நகரை சென்றடைந்துள்ளார்.

இந்நிலையில், சின்சோ அபேயின் இறுதிச்சடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜப்பானில் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அபேயின் அரச இறுதிச் சடங்கிற்கு நான் எதிரானவன் என்று ஒரு போராட்டகாரர்களிர் ஒருவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

அரச இறுதிச் சடங்கை நடத்துவதற்கான அடிப்படையானது "அவரது பங்களிப்பு மற்றும் கொள்கைகளின் அடிப்படையில்" இருக்க வேண்டும், "அவர் பிரதமராக இருந்த காலம் மட்டும்" அல்ல என்றார்.

"அவர் படுகொலை செய்யப்பட்டார் என்ற உண்மை - அதுவும் அரச இறுதிச் சடங்கை நடத்துவதற்கு ஒரு காரணமாக இருக்கக்கூடாது, ஏனென்றால் ஒரு பயங்கரவாத தாக்குதல் வரலாற்றை மாற்ற முடிந்தது," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இறுதிச் சடங்கிற்கான செலவு 1.67 மில்லியன் யென் (£10.96m, $11.4m)  என மதிப்பிடப்பட்டுள்ளது. இது மேலும் அழுத்தமான பொருளாதார பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52