பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண புலம்பெயர் தொழிலாளர்களின் பங்களிப்பு இன்றியமையாதது - மனுஷ

By Digital Desk 5

27 Sep, 2022 | 10:34 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

எமது எதிர்கால அரசியல் தொடர்பில் சிந்திக்கால் மக்கள் எதிர்கொண்டுவந்த நெருக்கடிகளுக்கு தீர்வுகாணவே அரசாங்கத்தில் இணைந்துகொண்டோம்.

எமது முயற்சியால் ஓரளவுக்கேனும் நெருக்கடிகளுக்கு தீர்வுகாண முடியுமாகி இருக்கின்றது. இதற்கு வெளிநாடுகளில் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்.

அதனாலே அவர்களுக்கு ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தி இருக்கின்றோம் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

வெளிநாடுகளில் தொழில்புரிந்துவருபவர்களின் ஓய்வுபெரும் காலத்தை வலுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தியிருக்கும் மனுசவிய சமூக பாதுகாப்பு பங்களிப்பு ஒய்வூதிய திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு திங்கட்கிழமை (26) வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியத்தில் இடம்பெற்றது. 

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

டொலர் இல்லாததால் அன்னிய செலாவணி குறைவடைந்து எமக்கு தேவையான அத்தியாவசி பொருட்களை இறக்குமதி செய்வதற்கு முடியாத நிலையில் இருந்தோம்.

இதனால் எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடு நாட்டில் பாரிய பிரச்சினையாக மாறி இருந்தது. எரிபொருட்களுக்கு நாட்கணக்கில் வரிசையில் இருக்கவேண்டிய நிலை இருந்தது. இதனால் ஒருசிலர் வரிசையில் இருந்து நோய்வாய்பட்டு மரணித்தனர். 

அத்துடன் இந்த பிரச்சினையை அடிப்படையாக்கொண்டு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை கறுப்புச்சந்தை முதலாளிமார் அதிகரித்தனர்.

பொருட்களின் விலை பாரியளவில் அதிகரித்துக்கொண்டு சென்றன. இதனால் மக்கள் எதிர்கொண்டுவந்த துன்பமான நிலைமையை பொருத்துக்கொள்ள முடியாமலேயே மனிதாபிமான அடிப்படையில், எமது எதிர்கால அரசியலையும் கருத்திற்கொள்ளாது, அரசாங்கத்துடன் இணைந்துகொண்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண தீர்மானித்தோம்.

எமது இந்த தீர்மானத்தை பலரும் விமர்சிக்கலாம். ஆனால் நாங்கள் அரசியலுக்காக தீர்மானம் மேற்கொள்ளவில்லை. மக்களின் நிலைமையை அறிந்து மனிதாபிமான  அடிப்படையிலேயே தீர்மானம் மேற்கொண்டாேம்.

மேலும் நாங்கள் அன்று எடுத்த தீர்மானம் காரணமாக எரிபொருள் மற்றும் எரிவாாயு பிரச்சினைகளுக்கு ஓரளவேனும் தீர்வுகாண முடியுமாகி இருக்கின்றது.

பொருட்களின் விலை அதிகரித்துச்செல்வதை கட்டுப்படுத்த முடியுமாகி இருக்கின்றது. வெளிநாடுகளில் தொழில் புரிபவர்களிடமிருந்து சட்ட ரீதியிலாக எமக்கு சுமார் 120 மில்லியன் டொலர்களே கிடைக்கெப்பற்றன. இதனை 500மில்லியன் டொலர்களாக மாற்றுவதே எமது இலக்காக இருந்தது. என்றாலும் தற்போது அது 325 மில்லியன் டொலர்வரை அதிகரித்திருக்கின்றது.

அத்துடன் புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டுக்கு அனுப்பும் டொலர்களே எமது வெளிநாட்டு செலாவணிக்கு பாரிய சக்தியாக இருக்கின்றது. அதனால் சட்ட ரீதியாக டொலர் அனுப்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பல சலுகைகளை நாங்கள் வழங்குவதற்கு தீர்மானித்தோம்.

குறிப்பாக இலத்திரணியல் வாகனம் கொண்டுவர அவர்களுக்கு அனுமதி வழங்கி இருக்கின்றாம். விட்டுக்கடன் வசதிகள் என பல சலுகைகளை வழங்கி இருக்கின்றோம். அந்தவகையி்ல் தற்போது அவர்களுக்கு ஓய்வூதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கின்றோம். 

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் கடந்த 2012ஆம் ஆண்டில் இருந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

அது சாத்தியமாகாத நிலையிலேயே, நாங்கள் சமூக பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து புலம்பெயர் தொழிலாளர்கள் ஓய்வுபெறும் காலத்தில் அவர்களுக்கு வலுவூட்டுவதற்காக  மனுசவிய ஒத்துளைப்பு ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கின்றோம். புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான முறையில் இந்த திட்டத்தில் இணைந்துகொள்ளலாம். . என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பௌத்த அறக் கொள்கையை பேணும் சிங்களவர்களை...

2022-11-28 21:07:19
news-image

ஓமான் தூதரக அதிகாரி கொழும்பு விமானநிலையத்தில்...

2022-11-29 05:48:09
news-image

அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கும் கொள்கை...

2022-11-28 16:51:42
news-image

அரசியல் மயமாகியுள்ள வெளிவிவகார அமைச்சை மறுசீரமைக்க...

2022-11-28 21:09:30
news-image

ஊடகத்தை அச்சுறுத்தி எந்த நெருக்கடிக்கும் தீர்வுகாண...

2022-11-28 16:08:41
news-image

யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டாலும் நாட்டில் சமாதானம்...

2022-11-28 15:13:06
news-image

இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி...

2022-11-28 17:19:07
news-image

அரச நிதி தொடர்பான முகாமைத்துவ சட்டத்தை...

2022-11-28 13:30:34
news-image

வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை அங்கேயே...

2022-11-28 21:08:04
news-image

பால் மாவின் விலை அதிகரிக்கிறது!

2022-11-28 21:00:39
news-image

மனித உரிமை ஆணைக்குழுவுடன் மோதி நாட்டை...

2022-11-28 17:04:25
news-image

சமூக ஊடகங்கள் ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா...

2022-11-28 12:40:38