இலங்கை இராணுவத்தின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறப்பு இஸ்லாமிய வழிபாடுகள்

By Digital Desk 5

27 Sep, 2022 | 10:26 AM
image

இராணுவத்தின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொள்ளுப்பிட்டி ஜும்மா பள்ளிவாசலில்  திங்கட்கிழமை (26) இராணுவ அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் இஸ்லாமிய மத முக்கியஸ்தர்களின் பங்கேற்புடன் இராணுவத்திற்கு ஆசி வேண்டி சிறப்பு இஸ்லாமிய மத வழிபாடுகள் இடம்பெற்றன.

பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியன பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் அல்-ஹாஜ் மொஹமட் கலீல், செயலாளர் மற்றும் கொள்ளுபிட்டிய ஜும்மா பள்ளி வாசல் நிர்வாக சபை சபையின் உறுப்பினர்கள் , இராணுவ முஸ்லீம் சங்க தலைவர் பிரிகேடியர் அஷ்கர் முத்தலிப் ஆகியோரால் வரவேற்கப்பட்டார்.

பின்னர் இஸ்லாமிய மத மரபுகளுக்கமைய அலங்கரிக்கப்பட்ட புனித பகுதியில் வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன. நாட்டின் நலன்களுக்காக இராணுவத்தின் சேவைகளைப் பாராட்டி இஸ்லாமிய மத பிரசங்கமான 'பயான்' மௌலவி இர்ஷாட் ஹில்மினால் நிகழ்த்தப்பட்டதுடன் இராணுவக் கொடிக்கு துவா  பிரார்த்தனை செய்தல், மௌலவி ஏ.பி.எம். ரிஸ்வான கிராத் ஓதல் என்பன இடம்பெற்றன.

அதே சந்தர்ப்பத்தில், கொள்ளுப்பிட்டி ஜும்மா பள்ளி வாசல் நிர்வாக சபைத் தலைவர் இராணுவத் தளபதிக்கு சிறப்பு நினைவு பரிசை வழங்கினார்.

இதேபோல், பள்ளி வாசல் நிர்வாக சபை உறுப்பினர் புனித அல் குர்ஆனை இராணுவத் தளபதிக்கு நல்லெண்ணத்தின் அடையாளமாக வழங்கினார். வழிபாடுகளின் நிறைவம்சமாக இராணுவத்தின் சகல உறுப்பினர்கள் சார்பிலும் பள்ளிவாசல் மேம்பாட்டுக்காக இராணுவத்தின் நன்கொடையும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கும் கொள்கை...

2022-11-28 16:51:42
news-image

அரசியல் மயமாகியுள்ள வெளிவிவகார அமைச்சை மறுசீரமைக்க...

2022-11-28 21:09:30
news-image

ஊடகத்தை அச்சுறுத்தி எந்த நெருக்கடிக்கும் தீர்வுகாண...

2022-11-28 16:08:41
news-image

யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டாலும் நாட்டில் சமாதானம்...

2022-11-28 15:13:06
news-image

இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி...

2022-11-28 17:19:07
news-image

அரச நிதி தொடர்பான முகாமைத்துவ சட்டத்தை...

2022-11-28 13:30:34
news-image

வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை அங்கேயே...

2022-11-28 21:08:04
news-image

பால் மாவின் விலை அதிகரிக்கிறது!

2022-11-28 21:00:39
news-image

மனித உரிமை ஆணைக்குழுவுடன் மோதி நாட்டை...

2022-11-28 17:04:25
news-image

சமூக ஊடகங்கள் ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா...

2022-11-28 12:40:38
news-image

2023 ஆம் ஆண்டில் கல்விப் பொதுத்...

2022-11-28 19:57:39
news-image

மனித உரிமை விடயத்தில் அரசாங்கம் நழுவிச்செல்லும்...

2022-11-28 19:54:34