இரண்டாம் உலகப் போர் காலத்தில், கொரியப் பெண்களை ஜப்பான் பாலியல் அடிமைகளாக வைத்திருந்தது தொடர்பில், இரு நாடுகளுக்கும் இடையே மிகநீண்ட காலமாக நிலவி வரும் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர ஜப்பான் முயற்சிகளை எடுத்து வருகின்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

"பாலியல் அடிமைகள்" பிரச்சினை இன்னும் தென் கொரியாவில் உணர்வுபூர்வமான ஒரு விஷயமாகவே உள்ளது.

"சுகமளிக்கும் பெண்கள்" எனக் கூறப்பட்ட இந்தக் கொரியப் பெண்கள், ஜப்பானிய இராணுவத்தின் விடுதிகளில் பாலியல் அடிமைகளாக பலவந்தமாகப் பயன்படுத்தப்பட்டனர்.

மிகநீண்ட காலாமாக நிலவி வரும் இந்த உரசல்கள் குறித்து தீர்வு ஒன்றை எட்டும்படி தமது வெளியுறவு அமைச்சர் ஃபுயுமோ கிஷிடாவுக்கு, ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ ஆபே உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.