அடையாளம் தான் துறப்போம். எல்லா தேசத்திலும் போய் வசிப்போம்..! இன்று உலக சுற்றுலா தினம்!

By T. Saranya

27 Sep, 2022 | 09:27 AM
image

உலகம் உருண்டை என்பது சுற்றிப் பார்க்கும் போது தான் தெரிகிறது. அடடா! இப்படி ஒரு உலகத்தில் தான் நாமும் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோமா என்று. எதாவதொன்றை தேடிப் போகும் போது தான் ஏதாவது ஒன்று கிடைக்கிறது. நல்ல நினைவுகள், மறக்க முடியாத அனுபங்கள் என்று அவை பல. இந்த உலகத்தில் எல்லா இடமுமே நம் இடம் தான். நாம் நினைத்தால் எங்கு வேண்டுமென்றாலும் செல்லாம். தடைபோட யாருமேயில்லை. 

புதிய புதிய இடங்களுக்கு செல்வதால் நம்மை நாமே புதிதாக உணராலம். இதை சொல்லும்போதே ஒரு திரைப்பாடல் நினைவிற்கு வருகிறது. அடையாளம் தான் துறப்போம். எல்லா தேசத்திலும் போய் வசிப்போம் என்ற பாடல் வரி இதற்கு பொருத்தமாக இருக்கும்.

இருப்பிடத்தை விட்டு நகர்ந்து இன்னொரு இடத்தை தேடி அலைந்து போவது சுற்றுலா என்ற ஒரு உதாரணத்தை முன்வைக்கலாம். 'தேடிப் போவோம். போய்தான் பார்ப்போம்' என்ற கருத்தில் தான் ஒரு சுற்றுலாப் பயணம் உருவாகிறது. இப்படி எழுந்தது தான் சுற்றுலாப் பயணம். 

உலகிலேயே வளர்ந்துவரும் மிகப்பெரிய துறைகளில் ஒன்று சுற்றுலாத்துறையாகும். இதனால் ஒரு நாட்டிற்கு கிடைக்கும் வருவாய் மிக அதிகம். 

நம் நாடும் ஒரு காலத்தில் சுற்றுலாத்துறைக்கு பெயர் போன நாடாகவே திகழ்ந்தது. சிறிய தீவு என்றாலும் இலங்கை மிக அழகானது என்று அயல் நாட்டவர்களால் பேசப்பட்டது. 'Wonder OF Asia" என்று அனைவராலும் அடையாளப்படுத்தப்பட்ட நம் இலங்கையின் தற்போதைய சுற்றுலாத்துறை வளர்ச்சி படு வீழ்ச்சி என்றே சொல்லவேண்டும். 

பல இலட்ச சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த இடங்களை கொண்ட நம் நாடு இப்போது சுற்றுலாப் பயணிகளின்றி காய்ந்து போகிறது. ஒரு முறையாவது இலங்கைக்கு சென்று வரவேண்டும் என்ற நிலை மாறி இலங்கைக்கா? இந்த நிலைமையிலா? வேண்டவே வேண்டாம். என்று பலர் சொல்லும் நிலையாயிற்றி. காரணம் கடந்தகால சம்பவங்கள் அப்படி. பொருளாதார வீழ்ச்சி, முறையற்ற ஆட்சி என நம் தாய் நாட்டின் பேரழகு தலைமறைக்கலானது.

நம் நாட்டில் இயற்கை அழகுக்கா பஞ்சம்?  திரும்புமிடமெல்லாம் திருக்கோயில்கள் கண்ட வடக்கு, இயற்கைத்துறைமுகத்துடன் ஆழியோடு குதித்தாடும் மீன்கள் பாடும் கிழக்கு, தென்கரை கல்லோடு அலையாடும் தென்னகம், பார்க்குமிடமெல்லாம் தேயிலை மணக்கும் பசுமை படர்ந்த மலையகம், புராதன சுவடுகள் வரலாறு கூறும் நிகழ்வுகள் வடமத்தியில் என திரும்பிய பக்கமெல்லாம் நம் நாட்டில் இயற்கை அழகுக்கும், செயற்கை படைப்புகளுக்கும் குறைவேயில்லை.

எல்ல, யால, பின்னவெல, தம்புள்ள, சிகிரியா, சிங்கராஜா, ஸ்ரீபாதை, உடவலவ, ஹோர்டன் ப்ளேஸ் இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இப்படியொரு இயற்கை அரன்களும் அழகும் சூழ்;ந்த நம் நாட்டின் பேரழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. 

பக்கத்திலிருக்கும் நாம் இதைப் பார்த்து ரசிக்க மறந்துவிட்டோம். ஆனால் இலங்கையின் இயற்கை அழகை காண காடு தாண்டி, கடல் தாண்டி பலரும் வருகின்றனர். 

இன்று சுற்றுலாப் பயணிகளின் வருகையின் எண்ணிக்கை மிகக்குறைந்துள்ள நிலையில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் என்பது ஒரு நம்பிக்கை. எது எவ்வாறாயினும் நம் நாட்டின் அழகையும், சுற்றுலாத் தளங்களையும் பாதுகாக்கவேண்டியது நம் பொறுப்பு.  

சுவஸ்திகா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓமான் பணிப்பெண்கள் விவகாரம் : மத்திய...

2022-12-01 14:33:01
news-image

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக மலையகத்தில் ஒன்றிணைந்த...

2022-12-01 14:32:19
news-image

உலக அழகி பிரியங்கா சோப்ரா மீதே...

2022-11-29 16:09:16
news-image

மத்திய வங்கியின் ஆளுநருக்கு மாதம் நான்கு...

2022-11-30 15:48:59
news-image

விடத்தல்தீவு எனும் இயற்கைப் வனத்தைப் பாதுகாப்போம்

2022-11-29 17:25:43
news-image

உணரப்பட வேண்டிய பெறுமதி

2022-11-28 15:05:06
news-image

உலக நீதி சீர்குலைந்த நாள் :...

2022-11-28 13:21:05
news-image

ஸ்கொட்லாந்தும் சுயநிர்ணய உரிமையும் - ஒரு...

2022-11-28 12:29:41
news-image

உலகப் போர் நினைவுச் சின்னங்களின் பின்னணியில்...

2022-11-28 11:05:34
news-image

அரசியல் தீர்வு: முஸ்லிம் தரப்பின் நிலைப்பாடு...

2022-11-27 17:30:18
news-image

உக்ரேனில் நீளும் போரும் குறைந்துவரும் ஆதரவும்

2022-11-27 17:16:51
news-image

வரவு - செலவுத் திட்டம் 2023...

2022-11-27 16:08:24