நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்

By Digital Desk 5

27 Sep, 2022 | 08:59 AM
image

மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கு மேல் ஓரளவு பலத்த மழையை எதிர்பார்க்கலாம்.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடல் பகுதிகள்:

கொழும்பில் இருந்து காலி வரையான கடற்பரப்புகளில் சிறிதளவு மழை பெய்யும்.

காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

காற்று தென்மேற்கு அல்லது மேற்கு திசையில் வீசும் மற்றும் காற்றின் வேகம் மணிக்கு 20-30 கிலோ மீற்றர் காலியிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-55 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

காலியிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்கரைப்பற்றுக்கு ஹெரோயின் கடத்தி வந்தவர் கைது

2022-12-02 11:49:42
news-image

உலகின் செலவு குறைந்த நகரங்கள் பட்டியலில்...

2022-12-02 12:12:05
news-image

இலங்கையின் அரசியல் கட்சிகளிற்கு அதிகாரத்தை கைப்பற்றுவது...

2022-12-02 11:27:45
news-image

இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களும்...

2022-12-02 11:47:59
news-image

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை...

2022-12-02 10:58:52
news-image

இன்றும் யாழ். கல்லுண்டாயில் 3ஆவது நாளாக...

2022-12-02 10:54:22
news-image

பணி இடை நிறுத்தப்பட்டுள்ள வைத்தியர் சமல்...

2022-12-02 10:25:52
news-image

இரட்டைக் கொலை வழக்கில் இரட்டை மரண...

2022-12-02 10:28:09
news-image

அனலைதீவு துறைமுகத்தில் கடல் அட்டை பண்ணைக்கு...

2022-12-02 10:32:00
news-image

வருமான வரி கணக்கை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம்...

2022-12-02 10:32:49
news-image

2024 இல் 30 இலட்சம் சுற்றுலாப்பயணிகளை...

2022-12-02 09:07:32
news-image

யாழில் நெற்பயிர்கள் பொட்டாசியம் இன்மையால் நுனி...

2022-12-02 10:20:59