சன்னி லியோன் நடிக்கும் 'ஓ மை கோஸ்ட்' படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியீடு

By T Yuwaraj

26 Sep, 2022 | 09:28 PM
image

கவர்ச்சி நடிகை சன்னி லியோன் கதையின் நாயகியாக நடித்திருக்கும் 'ஓ மை கோஸ்ட்' படத்தில் இடம்பெற்ற சிங்கிள் ட்ராக் வெளியிடப்பட்டிருக்கிறது.

'சிந்தனை செய்' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் ஆர். யுவன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'ஓ மை கோஸ்ட்'. இதில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 

இவருடன் சதீஷ், ரமேஷ் திலக், நான் கடவுள் ராஜேந்திரன், யோகி பாபு, அர்ஜுனன், தர்ஷா குப்தா, ஜி. பி. முத்து உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தீபக் டி மேனன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜாவித் ரியாஸ் மற்றும் தரண்குமார் இசையமைத்திருக்கிறார்கள். 

ஹாரர் கொமடி ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விஏயு மீடியா என்டர்டெய்ன்மென்ட் மற்றும் வைட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் டி. வீரசக்தி மற்றும் கே. சசிகுமார் ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள்.

நடிகை சன்னி லியோனுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருப்பதால் 'ஓ மை கோஸ்ட்' திரைப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என இந்திய மொழிகளில் தயாராகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. 

இந்நிலையில் இந்தப் படத்தில் இடம்பெற்ற 'டுமாங்கா..' எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியாகி இருக்கிறது. பாடலாசிரியர் பா விஜய் எழுதிய இந்தப் பாடலை கானா சேது மற்றும் கானா மாஸ் மணி ஆகியோர் பாட, ஜாவித் ரியாஸ் இசையமைத்திருக்கிறார். இந்தப் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்