முடக்குவாத பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன சிகிச்சை

By T Yuwaraj

26 Sep, 2022 | 09:13 PM
image

இன்றைய சூழலில் உலகளவில் ஒரு இலட்சம் மக்களின் ஏறத்தாழ 500 பேர் ரூமட்டாய்ட் ஓர்த்ரைட்டிஸ் எனப்படும் முடக்குவாத பாதிப்பிற்கு ஆளாகிறார்கள். அதிலும் குறிப்பாக 30 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கும், மாதவிடாய் நின்ற பெண்களில் பெரும்பாலானவர்களுக்கும் இந்த பாதிப்பிற்கு ஆளாகுவதாக அண்மைய ஆய்வு தெரிவிக்கிறது. இந்நிலையில் ரூமட்டாய்ட் ஓர்த்ரைட்டிஸ் எனப்படும் முடக்குவாத பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் புதிய சிகிச்சை கண்டறியப்பட்டிருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

முடக்கு வாதம் என்பது மூட்டுகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வீக்கம், வலி ஏற்படும் ஒரு பாதிப்பாகும். இது எம்முடைய உடலில் உள்ள நோய் எதிர்ப்பு திறன், எம்முடைய ஆரோக்கியமான உடல் பாகங்களை தாக்குவதால் ஏற்படும் பாதிப்பாகும். இதனை சரியான தருணத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால், மூட்டுகளில் உள்ள குருத்தெலும்புகளில் சேதத்தை ஏற்படுத்தி, பாரிய பக்கவிளைவுகளை உண்டாக்கிவிடும்.

கை, கால், முழங்கை, முழங்கால், மணிக்கட்டுகள், கணுக்கால் ஆகிய மூட்டுகளில் முடக்கு வாத பாதிப்பு ஏற்படுகிறது. இதனை உரிய தருணத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால் இதன் காரணமாக இதயம் அல்லது சுவாச மண்டலம் பாதிக்கப்படலாம். எனவே மருத்துவ மொழியில் இதனை சிஸ்டமிக் டிசிஸ் என்று வகைப்படுத்துகிறார்கள்.

காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் விறைப்புடன் இருப்பது, களைப்பாக இருப்பது, மூட்டுகளில் வலி இருப்பது, வாய் மற்றும் கண்கள் வறண்டிருப்பது, முழங்கை, முழங்கால் மூட்டுகளில் கட்டிகள் தோன்றியிருப்பது அல்லது சிவந்து, வீங்கி இருப்பது, காய்ச்சல், எடை குறைவு, ஒரே தருணத்தில் இரண்டு கைகளிலும், இரண்டு கால்களிலும் வலி ஏற்படுவது.. போன்ற அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்து கொண்டு சிகிச்சை பெற வேண்டும்.

மரபணு மாற்றங்கள், நோய் தொற்றுகள், ஹோர்மோன் சுரப்பியில் ஏற்படும் சமச்சீரற்ற தன்மை, புகைபிடிப்பது, சுற்றுச்சூழல் மாசு என பல்வேறு காரணங்களால் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதனை மருத்துவர்கள் இரத்த பரிசோதனை, எக்ஸ்ரே பரிசோதனை மூலம் உறுதிப்படுத்திய பிறகு, வலி நிவாரண மருந்துகளை வழங்கி முதன்மையான நிவாரண சிகிச்சையை அளிப்பார்கள். சிலருக்கு இயன்முறை மருத்துவம் எனப்படும் பிசியோதெரபி சிகிச்சையும் இணைத்து நிவாரணம் அளிப்பார்கள். தற்போது இத்தகைய பாதிப்பிற்கு உள்ளானவர்களுக்கு மைக்ரோ மோட்டார் எனப்படும் நவீன சிகிச்சை வழங்கப்பட்டு, முழுமையான நிவாரணம் வழங்கப்படுகிறது.

டொக்டர் ராஜ் கண்ணா

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்

2022-12-02 12:49:39
news-image

குழந்தையின் நாக்கை சுத்தம் செய்யும்போது...

2022-12-02 10:55:30
news-image

துளசி க்ரீன் டீ குடிப்பதால் கிடைக்கும்...

2022-11-30 16:11:43
news-image

தனியாக உணவு உட்கொண்டால் இதயக்கோளாறு நிச்சயமாம்...

2022-11-30 16:26:14
news-image

க்ளா ஹேண்ட் எனப்படும் சுண்டு விரல்...

2022-11-30 13:49:13
news-image

தாய்ப்பால் சுரப்பை பாதிக்கும் மன அழுத்தம்

2022-11-30 15:59:38
news-image

சீனிக்கு பதிலாக தேனா?

2022-11-30 16:21:16
news-image

ஒரு நாளைக்கு 2 லீற்றர் தண்ணீர்...

2022-11-30 10:30:45
news-image

குருதிநெல்லியின் மருத்துவ குணங்கள்

2022-11-27 12:03:46
news-image

வேதிப்பொருட்களால் அதிகம் பாதிக்கப்படும் குழந்தைகள்

2022-11-25 13:17:56
news-image

ரைனிட்டிஸ் மெடிகமென்டோசா எனும் மூக்கடைப்பு பாதிப்பிற்கான...

2022-11-25 10:44:45
news-image

குழந்தை வயிற்று வலியால் அழுகிறதா?

2022-11-24 17:29:31