ஜனாதிபதி ரணிலை பிரதிவாதி பட்டியலில் இருந்து நீக்கியது உயர் நீதிமன்றம்

Published By: Digital Desk 4

26 Sep, 2022 | 09:28 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

போதுமான உளவுத் தகவல்கள் இருந்தும் 21/4 உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல்களை  தடுக்க   தவறியதன் ஊடாக, தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக  கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்களில்,  பிரதிவாதிகள் பட்டியலில் பெயரிடப்பட்டுள்ள   தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக அவ்வழக்குகளை முன்னெடுத்து செல்ல முடியாது என  உயர் நீதிமன்றம் இன்று அறிவித்தது. 

குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள்  பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய,  நீதியரசர்களான புவனேக அலுவிஹார, எல்.டி.பி.தெஹிதெனிய,  முர்து பெர்ணான்டோ, எஸ். துரைராஜா, ஏ.எச்.எம்.டி. நவாஸ், ஷிரான் குணரத்ன  ஆகியோர் அடங்கிய ஏழுபேர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன் இன்று விசாரணைக்கு  எடுத்துக்கொள்ளப்பட்டன. இதன்போதே உயர் நீதிமன்றம் இந்த தீர்னானத்தை அறிவித்தது.

கடந்த ஜூலை 26 ஆம் திகதி  இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது,  பிரதிவாதிகளில் ஒருவரான முன்னாள் பிரதமரும் இந் நாள் ஜனாதிபதியுமான  ரணில் விக்கிரமசிங்க சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்ணான்டோவினால் அடிப்படை ஆட்சேபனை ஒன்று முன் வைக்கப்பட்டிருந்தது. 

தனது சேவை பெறுநர் தற்போது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள நிலையில், அரசியலமைப்பின் 35 ஆவது உறுப்புரை பிரகாரம் அவருக்கு எதிராக எந்த வழக்கினையும் முன்னெடுத்து செல்ல முடியாது எனவும் , அது அவருக்கு அரசியலமைப்பூடாக வழங்கப்பட்டுள்ள விடுபாட்டுரிமை எனவும்  சட்டத்தரணி சுரேன் பெர்ணான்டோவினால் குறிப்பிடப்பட்டிருந்தது.

குறித்த வாதத்துக்கு எதிராக வாதங்கள் மனுதாரர் மற்றும் பிரதிவாதிகள்  சிலரால் முன் வைக்கப்பட்ட நிலையில் உயர் நீதிமன்றம் இன்று தனது தீர்னானத்தை அறிவித்தது.

பிரதம நீதியரசர் உயர் நீதிமன்ற தீர்னானத்தை  திறந்த மன்றில் அறிவித்தார்.

அதன்படி, பதவியில் இருக்கும் ஜனாதிபதிக்கு எதிராக அரசியலமைப்பின் 35 (1) உறுப்புரை பிரகாரம் வழக்க்ப்ன்றை முன்னெடுத்து செல்ல முடியாது என அறிவித்தார்.

ஜனாதிபதிக்கு தனது கடமையை இடையுஇறின்றி முன்னெடுக்க இந்த விடுபாட்டுரிமை அரசியலமைப்பிஉடாக வழங்கப்பட்டிள்ளதாக பிரதம நீதியரசர் குறிப்பிட்டார்.

அதனால்  தற்ப்பொதைய ஜனாதிபதிக்கு எதிராக இந்த சந்தர்ப்பத்தில் குத்த மனுக்களை முன்னெடுத்து செல்ல முடியாது என உயர் நீதிம்ன்றின் திர்ப்பை பிரதம நீதியரசர் அறிவித்து வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஸெப்டெம்பெர் 29 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

முன்னதாக ஜனாதிபதி ரணில் சார்பிலான ஆட்சேபனைக்கு மற்றொரு பிரதிவாதியான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சட்டத்தரணி ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா கடும் எதிர்ப்பு வெளியிட்டு கடந்த ஜூலை27 ஆம் திகதி வாதங்களை முன் வைத்திருந்தார்.

தற்போதைய ஜனாதிபதிக்கு எதிராக இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை முன்னெடுத்து செல்ல முடியாது என அவரது சட்டத்தரணிகள் முன் வைத்துள்ள வாதம் அடிப்படையற்றது என ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா குறிப்பிட்டார்.

' ஜனாதிபதிக்குரிய விடுபாட்டுரிமை இந்த வழக்கை பொருத்தவரை பொருத்தமற்றது. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக இவ்வழக்கை முன்னெடுத்து செல்ல எந்த தடையும் இல்லை.

ரணில் விக்கிரமசிங்க, பிரதமராக பதவி வகித்தபோது முன்னெடுத்த உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் தொடர்பில், அவர் ஜனாதிபதியானதால் கிடைக்கும் விடுபாட்டுரிமை ஊடாக எந்த பாதுகாப்பும் கிடைக்காது.

அதனால் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக வழக்கு விசாரணையை தொடர்ந்து முன்னெடுத்து செல்லலாம் என உத்தரவினை பிறப்பிக்க வேண்டும்.' என ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா கோரினார்.

இந் நிலையில் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் திகதி இம்மனுக்கள் விசாரணைக்கு வந்த போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சார்பில் மன்றில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்ணான்டோ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சார்பிலான வாதங்களுக்கு பதில் வாதங்களை முன் வைத்தார்.

'ஜனாதிபதிக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றினை தாக்கல் செய்வதானால், பிரதிவாதியாக சட்ட மா அதிபரை பெயரிட்டு அதனை முன்னெடுக்கலாம்.

எனினும் இந்த மனுக்களில் பிரதிவாதியாக ரணில் விக்கிரமசிங்க பெயரிடப்பட்டுள்ளதால், அரசியலமைப்பின் 35 (1) ஆம் உறுப்புரைக்கு அமைய அவருக்கு எதிராக இவ்வழக்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல முடியாது .

எனது சேவை பெறுநரை வழக்கிலிருந்து விடுவிப்பதால் இந்த வழக்கு விசாரணைகள் எந்த வகையிலும் பாதிக்கப்படாது.' என சட்டத்தரணி சுரேன் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.

 சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஜனாதிபதி சட்டத்தரணி பிரியந்த நாவானவும் மன்றில் வாதங்களை முன் வைத்திருந்தார்.

' ஜனாதிபதியாக பதவி வகித்த எந்தவொரு நபரும் செய்த அல்லது செய்யாமல் தவிர்ந்த எந்தவொரு நடவடிக்கை தொடர்பிலும் எந்தவொரு நீதிமன்றிலும் வழக்குத் தொடுப்பதோ அல்லது வழக்கொன்றினை முன்னெடுத்து செல்வதோ கூடாது என அரசியலமைப்பின் 35 ( 1) ஆம் உறுப்புரை கூறுகிறது. ' என அவர் தெரிவித்திருந்தார்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன் வைத்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்திதிருந்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் பிரியந்த நாவான, ஜனாதிபதிக்கு எதிராக எந்தவொரு நீதிமன்றிலும் வழக்கொன்றினை தாக்கல் செய்து முன்னெடுத்து செல்ல முடியாது என குறிப்பிட்டிருந்தார்.

அதனால் இந்த மனுக்களில் இருந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விடுவிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

எனினும் மனுதாரர் தரப்பினர், பிரதிவாதி ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க மற்றும் சட்ட மா அதிபர் சார்பிலான வாதங்களுக்கு கடும் ஆட்சேபனை வெளியிட்டிரிந்தனர்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சார்பில் தாக்கல்ச் செய்யப்பட்டுள்ள மனுக்களுக்காக மன்றில் ஆஜரான அச்சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைய ஜனாதிபதிக்கு விடுபாட்டுரிமை என்பது சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகள் தொடர்பில் மட்டுமே உள்ளதாகவும் இந்த வழக்கு அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் என்பதால் இதனை முன்னெடுத்து செல்லலாம் என வாதிட்டிருந்தார்.

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சார்பில் மன்றில் அஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஷமீல் பெரேராவும், ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸின் வாதங்களுடன் ஒத்துப் போவதாகவும், அதனால் ரணில் விக்ரமசிங்கவை பிரதிவாதியாக தொடர்ந்து கருதி வழக்கு விசாரணை செய்யப்படல் வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இந் நிலையில் அனைத்து தரப்பினரதும் வாதங்களை செவிமடுத்த நீதியரசர்கள் குழாம், இவ்விடயம் தொடர்பிலான தீர்னானத்தை இன்று அறிவித்தது.

21/4 தற்கொலை குண்டுத்தாக்குதலில் தனது இரு பிள்ளைகளை இழந்த தந்தையான நந்தன சிறிமான்ன, சுற்றுலா துறை வர்த்தகர் ஜனக விதானகே, இரு கத்தோலிக்க மதகுருமார், ஷெங்ரில்லா ஹோட்டலில் குண்டுத் தாக்குதலிலொ சிக்கிய சட்டத்தரணி மோதித்த ஏக்கநாயக்க, கத்தோலிக்க மதத் தலைவர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட 12 தரப்பினரால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.இதில் பிரதிவாதிகள் தரப்பினராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க, அப்போதைய அமைச்சரவை, முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி, பொலிஸ் மா அதிபர் பூஜித், தேசிய உளவுச் சேவையின் பணிப்பாளராக இருந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன, தேசிய உளவுச் சேவை பிரதானியாக இருந்த சிசிர மெண்டிஸ், மற்றும் சட்ட மா அதிபர் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30