வெளிநாட்டு வேலைவாய்ப்பு குறித்து அமைச்சர் மனுஷ நாணயக்கார பொது மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள்

By T Yuwaraj

26 Sep, 2022 | 09:29 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக தெரிவித்து பண மோசடியில் ஈடுபட்டுவரும் மோசடிக்காரர்களிடம் சிக்கிக்கொள்ள வேண்டாம் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்.

நாட்டின் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக இளைஞர். யுவதிகள் வெளிநாட்டு தொழிலுக்கு செல்வதற்கு முயற்சித்து வருகின்றனர்.

இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொண்டு சிலர் ஒரு சிலநாடுகளை குறிப்பிட்டு அங்கு தொழில் பெற்றுத்தருவதாக  தெரிவித்து, சமூக வலைத்தலம் மற்றும் இணையத்தலங்களில் விளம்பரங்களை பிரசுரித்து பணம் பெற்றுக்கொள்ளும் மோசடிக்கார்கள் தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு கிடைக்கப்பெற்று வரும் முறைப்பாடு நாளாந்தம் அதிகரித்து வருகின்றது.

அதனால் வெளிநாட்டு தொழிலுக்கு செல்வதற்கு எந்தவொரு நபருக்கோ அல்லது நிறுவனத்துக்கோ கடவுச்சீட்டையோ பணத்தையோ கொடுப்பதற்கு முன்னர் குறித்த நிறுவனம் பணியகத்தின் அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொண்ட சட்டரீதியிலான நிறுவனமா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்.

அத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களின் சட்ட ரீதியிலான தன்மை தொடர்பில் பணியகத்தின்  www.slbfe.lk என்ற இணைத்தலம் அல்லது பணியகத்தின் 24மணி நேரம் செயற்படும் துரித இலக்கமான 1989 ஊடாக தொடர்புகொண்டு அறிந்துகொள்ளலாம்.

அத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகாரர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் அதுதொடர்பில் பணியகத்தின் விசேட விசாரணைப்பிரிவின் 0112864241 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு முறையிடுமாறும் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை போன்ற நாடுகளிற்கு உதவுவதற்கு ஜி20இன்...

2022-12-02 12:40:31
news-image

அக்கரைப்பற்றுக்கு ஹெரோயின் கடத்தி வந்தவர் கைது

2022-12-02 11:49:42
news-image

உலகின் செலவு குறைந்த நகரங்கள் பட்டியலில்...

2022-12-02 12:12:05
news-image

இலங்கையின் அரசியல் கட்சிகளிற்கு அதிகாரத்தை கைப்பற்றுவது...

2022-12-02 11:27:45
news-image

இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களும்...

2022-12-02 11:47:59
news-image

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை...

2022-12-02 10:58:52
news-image

இன்றும் யாழ். கல்லுண்டாயில் 3ஆவது நாளாக...

2022-12-02 10:54:22
news-image

பணி இடை நிறுத்தப்பட்டுள்ள வைத்தியர் சமல்...

2022-12-02 10:25:52
news-image

இரட்டைக் கொலை வழக்கில் இரட்டை மரண...

2022-12-02 10:28:09
news-image

அனலைதீவு துறைமுகத்தில் கடல் அட்டை பண்ணைக்கு...

2022-12-02 10:32:00
news-image

வருமான வரி கணக்கை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம்...

2022-12-02 10:32:49
news-image

2024 இல் 30 இலட்சம் சுற்றுலாப்பயணிகளை...

2022-12-02 09:07:32