திபெத் மீதான தனது பொய்யான உரிமை கோரல்களை நியாயப்படுத்த நூல்களை பயன்படுத்துகின்றது சீனா

By Rajeeban

26 Sep, 2022 | 05:29 PM
image

திபெத் மீதான தனது பொய்யான உரிமை கோரல்களை நியாயப்படுத்த சீனா நூல்களை பயன்படுத்துகின்றது.

திபெத் மீதான தனது  படையெடுப்பு குறித்த கருத்துக்களை திரிபுபடுத்துவதற்காகவும் திபெத் மீதான தனது தவறான உரிமை கோரலை நியாயப்படுத்துவதற்காகவும் சீன தற்போது நூல்களை பயன்படுத்துகின்றது.

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் எழுதிய வரலாறு குறித்த பல்மொழி நூல்களை பதிப்பித்து வெளியிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சீன கம்யுனிஸ்;ட் கட்சி திபெத்தின் இளம் வயதினர் மத்தியில் திபெத் குறித்த சீனாவின் கருத்துக்களை திணிக்க முயல்கின்றது.

திபெத்தின் உரிமைகள் தொடர்பான அமைப்பின் அறிக்கை இதனை சுட்டிக்காட்டியுள்ளது.

சீனாவின் சீனாவின் கம்யுனிஸ்;ட் கட்சி அனுமதி வழங்கிய திபெத்தின் பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளில்  அறிமுகப்படுத்த முயல்கின்றது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது திபெத்தின் வரலாறு குறித்த சீனாவின் கருத்தினை அடிப்படையாககொண்டது.

சீனா ரஸ்ய -சீன பிரென்ஞ் சீன ஸ்பானிஸ் சீன ஜப்பான் மொழிகளில் வெளியான இந்த வரலாற்று நூல் தொகுக்கப்பட்டு  னால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என திபெத் உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

1965 இல் அமெரிக்க எழுத்தாளர் அனா லூயிஸ் ஸ்டிரோங் எழுதிய நூல் திபெத்தின் ஜனநாயக சீர்திருத்தத்தினை புரிந்துகொள்வதற்கான சிறந்த நூல் என செப்டம்பர் 11 ம் திகதி சீன ஊடகம் தெரிவித்திருந்தது.

12வது அத்தியாயம் திபெத் குறித்த முக்கியமான வலுவான கருத்தை முன்வைக்கின்றது எனவும் தெரிவித்துள்ளது.

எழுத்தாளரின் வலுவான அவதானிப்பின் படி திபெத் சிறப்பான ஜனநாயக சீர்திருத்தங்களை எதிர்கொண்டுள்ளது பனிபடர்ந்த பகுதி புத்துணர்வு பெற்றுள்ளது என அவர் குறிப்பிடுகின்றார் என சீன ஊடகம் தெரிவித்துள்ளது.

இது சீன கம்யுனிஸ்ட் கட்சியின் திபெத் குறித்த வரலாற்றுடனும் சீனா திபெத்த விடுதலை செய்துள்ளது என்ற சொல்லாடலுடனும்  ஒத்துப்போகின்றது.

இது உண்மையான வரலாற்றின் திரிபுபடுத்தப்பட்ட கருத்தாகும்.

குறிப்பிட்ட கட்டுரை  விமர்சனமற்ற சிந்தனையுடைய சோம்பல்தனம் மிக்க செய்தியறிக்கையிடல் திபெத் குறித்து திட்டமிட்டு தவறாக வழிநடத்தல்  ஆகிய மேற்குலக ஊடகங்களில் இன்னமும் காணப்படுகின்றன என கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது.

இவர்கள் சாய்வு நாற்காலி எழுத்தாளர்கள்  தங்கள் கற்பனையில் உள்ள திபெத் மாத்திரமே காணப்படுகின்றது என நினைப்பவர்கள்  உண்மையான திபெத்தில் காணப்படும் நிலவரத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் என அந்த கட்டுரை தெரிவித்துள்ளது.

சீனா திபெத் மக்களை நடத்தும் விதம் குறித்த எந்த தகவலும் தவறான தகவல் சீனா திபெத்தில் முன்னெடுத்துள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லாத நிலை என வர்ணிக்கப்படுகின்றது என திபெத்தின் உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் பிரபல நடிகை காஸியானி பிணையில்...

2022-11-28 16:37:26
news-image

ரஷ்யா - உக்ரைன்  போரில் குளிா்காலம்,...

2022-11-28 17:01:08
news-image

துபாய், ஐரோப்பாவில் 30 தொன் போதைப்பொருள்...

2022-11-28 16:16:13
news-image

கணவனைக் கொலைசெய்து 22 துண்டுகளாக வெட்டி...

2022-11-28 15:04:43
news-image

சோமாலிய ஹோட்டலில் தீவிரவாதிகளுடன் படையினர் மோதல்:...

2022-11-28 13:14:47
news-image

பெண்கள் ஆடை பற்றிய கருத்தால் சர்ச்சை:...

2022-11-28 12:42:05
news-image

இந்தியா - பூடான் இணைந்து உருவாக்கிய...

2022-11-28 13:40:27
news-image

பாப்பரசருடனான தொலைபேசி உரையாடலை இரகசியமாக பதிவுசெய்த...

2022-11-28 12:26:34
news-image

மும்பைத் தாக்குதல் குற்றவாளிகளை நீதியின் முன்...

2022-11-28 12:16:33
news-image

மின் கம்பத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய...

2022-11-28 10:35:31
news-image

கொவிட் ஊரடங்கிற்கு எதிராக சீனாவில் போராட்டம்...

2022-11-28 09:59:28
news-image

கெமரூனில் மண்சரிவு : 14 பேர்...

2022-11-28 08:45:21