உயிர்த்த ஞாயிறு தாக்குதல், வவுணதீவு பொலிசார் கொலை : கைதான 4 பேருக்கு பிணை

By T Yuwaraj

26 Sep, 2022 | 09:12 PM
image

மட்டக்களப்பு வவுணதீவில் பொலிசார் இருவர் சுட்டுகொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சாஹ்ரானின் சாரதி உட்பட 4 பேரை இன்று திங்கட்கிழமை (26) மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லா  தலா 35 ஆயிரம் ரூபா பணமும்  10 இலட்சம் ரூபா இருவர் கொண்ட சரீரப் பிணையிலும் கடவு சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறு  நிபந்தனையுடன் பிணையில்  விடுவித்துள்ளார். 

கடந்த 2018-11-29 ஆம் திகதி வவுணதீவு வலையிறவு பொலிஸ் சோதனைச்சாவடியில் இரு பொலிசாரை துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தியும் கொலை செய்த சம்பவம் மற்றும்  2019 ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக 2019 ஏப்ரல் 29 ஆம் திகதி சாஹ்ரானின் கார் சாரதியான கபூர் மாமா என்றழைக்கப்படும் சஹீர் ஆதம்லெப்பை, அப்துல் மனாப் மொஹொமட் பீர்தௌஸ், ஹம்சா மொஹொதீன் மொஹமட் இம்ரான், ஹய்யாது மொஹொமட் மில்ஹான் ஆகிய நான்கு பேரையும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வு பிரிவினர் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் வழக்கு தாக்குதல் செய்ததையடுத்து இவர்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர் 

இந்த நிலையில் இன்று திங்கட்கிழமை (26) மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது சிறைச்சாலையில் இருந்து பாதுகாப்பாக அழைத்துவரப்பட்டு இவர்கள் சார்பில்  ஆஜராகிய சிரேஷ;ட சட்டத்தரணி எஸ்.எம். முகமட் அமீன் இவர்களை பிணையில் விடுவிக்குமாறு மன்றில் கோரிய நிலையில் இவர்களை தலா 35 ஆயிரம் ரூபா பண பிணையிலும், தலா 10 இலட்சம் ரூபா இருவர் கொண்ட சரீரப் பிணையிலும் கடவு சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும் அடுத்த வழக்கு எதிர்வரும் ஜனவரி 12ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு  உத்தரவிட்டு பிணையில் விடுவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதை தனியார்மயப்படுத்தல் என...

2022-12-08 16:33:06
news-image

ஜனாதிபதி விரும்பினால் அமைச்சரவையில் மாற்றம் -...

2022-12-08 16:30:49
news-image

கூட்டணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார் வேலுகுமார் -...

2022-12-08 22:00:49
news-image

பாடசாலை விடுமுறை குறித்த விசேட அறிவிப்பு 

2022-12-08 21:38:21
news-image

தமிழ் அரசியல் கைதிகளை ஒரே தடவையில்...

2022-12-08 15:23:26
news-image

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது சிறந்த...

2022-12-08 14:58:05
news-image

ஊழல் மோசடி முடிவுக்கு வரும் வரை...

2022-12-08 18:39:48
news-image

அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர்கள் தெரிவு பெரும்பான்மை...

2022-12-08 18:41:55
news-image

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவை கலைத்துவிட வேண்டும் -...

2022-12-08 13:39:41
news-image

6 கோடி ரூபா பெறுமதியான தேங்காய்...

2022-12-08 18:38:26
news-image

2023 ஆம் ஆண்டுக்கான வரவு -...

2022-12-08 19:04:07
news-image

மக்களுக்கு கஷ்டமாக இருந்தாலும் மின் கட்டணத்தை...

2022-12-08 18:17:53