மே 09 வன்முறை : விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு - பதில் பாதுகாப்பு அமைச்சர்

By T. Saranya

26 Sep, 2022 | 09:05 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நாட்டில் மே மாதம் 09 ஆம் திகதி மற்றும் அதனை அண்மித்த தினங்களில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கை வெகுவிரைவில் பாராளுமன்றுக்கு சமர்ப்பிக்கப்படும்.

குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

பாராளுமன்றில் கடந்த வாரம் இடம்பெற்ற பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனை குழுவின் முதலாவது கூட்டத்தின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மே மாதம் 09 ஆம் திகதி மற்றும் அதனை அண்மித்த தினங்களில் நாட்டில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் ஆராய முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஒஃப்த எயார்போர்ஸ் ரொஷான் குணதிலக மற்றும் முன்னாள் இராணுவ தளபதி  ஜெனரால் தயா ரத்நாயக்க (ஓய்வு) ஆகியோரை உள்ளடக்கிய குழு நியமிக்கப்பட்டது.

குழுவினர் கடந்த 8 ஆம் திகதி ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். பாதுகாப்புத் துறையில் ஏதாவது குறைப்பாடுகள் இடம்பெற்றிருந்தால் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வன்முறை சம்பவங்களில் ஈடுப்பட்டவர்கள் மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு நிலை) கமல் குணரத்ன குழு கூட்டத்தின் போது தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும், ஐக்கிய அரவு இராச்சியத்துக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள மீள ஒப்படைத்தல் ஒப்பந்தம் தொடர்பான கட்டளை பாராளுமன்றத்தின் அனுமதிக்காக சமர்ப்பிப்பதற்க பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனை குழு அனுமதி வழங்கியுள்ளது.

2014 ஆம் ஆண்டு இரு நாட்டுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்துக்கு அமைய ஐக்கிய அரபு இராச்சியத்தின் குற்றவாளிகள் உள்ளிட்ட கைது செய்யப்பட வேண்டிய நபர்களை இந்நாட்டுக்குள் கொண்டு வரும்போது ஏற்படுகின்ற சட்ட ரீதியான தடைகளை நீக்குவது இதன் நோக்கமாகும்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கும் கொள்கை...

2022-11-28 16:51:42
news-image

அரசியல் மயமாகியுள்ள வெளிவிவகார அமைச்சை மறுசீரமைக்க...

2022-11-28 21:09:30
news-image

ஊடகத்தை அச்சுறுத்தி எந்த நெருக்கடிக்கும் தீர்வுகாண...

2022-11-28 16:08:41
news-image

யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டாலும் நாட்டில் சமாதானம்...

2022-11-28 15:13:06
news-image

இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி...

2022-11-28 17:19:07
news-image

அரச நிதி தொடர்பான முகாமைத்துவ சட்டத்தை...

2022-11-28 13:30:34
news-image

வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை அங்கேயே...

2022-11-28 21:08:04
news-image

பால் மாவின் விலை அதிகரிக்கிறது!

2022-11-28 21:00:39
news-image

மனித உரிமை ஆணைக்குழுவுடன் மோதி நாட்டை...

2022-11-28 17:04:25
news-image

சமூக ஊடகங்கள் ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா...

2022-11-28 12:40:38
news-image

2023 ஆம் ஆண்டில் கல்விப் பொதுத்...

2022-11-28 19:57:39
news-image

மனித உரிமை விடயத்தில் அரசாங்கம் நழுவிச்செல்லும்...

2022-11-28 19:54:34