(நா.தனுஜா)
கொழும்பின் சில பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவும் அதன் நோக்கமும் சட்டத்திற்கும் அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கும் முரணானது என்றும், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை முடக்குவதற்கு ஐக்கிய தேசியக்கட்சி - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர் நடவடிக்கைகளின் ஓரங்கமே இதுவென்றும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் கடும் விசனத்தை வெளியிட்டுள்ளது.
1955 ஆம் ஆண்டு 32 ஆம் இலக்க உத்தியோகபூர்வ இரகசியங்கள் சட்டத்தின்கீழ் ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவினால் கொழும்பிலுள்ள சில பகுதிகள் அதியுயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
அதியுயர் பாதுகாப்பு வலயங்களைப் பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த 23 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் நாம் மிகுந்த விசனமடைகின்றோம். இவ்வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக கொழும்பு மாவட்டத்திலுள்ள சில பகுதிகள் அதியுயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதுடன் அப்பகுதிகளில் முன்னெடுக்கப்படக்கூடிய செயற்பாடுகள் தொடர்பில் தீவிர மட்டுப்பாடுகளும் கடுமையான பிணை நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த உத்தரவுகளும் நிபந்தனைகளும் 1955 ஆம் ஆண்டு 32 ஆம் இலக்க உத்தியோகபூர்வ இரகசியங்கள் சட்டத்தின்கீழ் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன.
இருப்பினும் அச்சட்டத்தை மிகவும் நுட்பமாக ஆராயும்போது நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய முக்கிய இரகசியத்தகவல்களைப் பாதுகாப்பதை பிரதான நோக்கமாகக் கொண்டிருக்கும் அச்சட்டத்தின் வரையறைகளுக்கு அமைவாக இந்த உத்தரவு அமையவில்லை என்பது தெளிவாகின்றது.
எனவே இவ்வுத்தரவும் அதன்கீழ் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளும் அவற்றின் நோக்கமும் சட்டத்திற்கும் அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கும் முரணானது என்பது குறித்து நாம் கவனம் செலுத்தியிருக்கின்றோம்.
அத்தோடு உத்தியோகபூர்வ இரகசியங்கள் சட்டத்தின்கீழுள்ள வழிகாட்டல்கள் மூலம் அடிப்படை உரிமைகளை முழுமையாக மட்டுப்படுத்தமுடியாது.
எனவே அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளைத் தன்னிச்சையாகக் கட்டுப்படுத்துவதற்கும் கருத்து வெளிப்பாட்டை அடக்குவதற்கும் நாட்டிற்குள் அச்ச உணர்வை உருவாக்குவதற்கும் ஐக்கிய தேசியக்கட்சி - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர் நடவடிக்கைகளின் ஓரங்கமே இதுவென்பது தெளிவாகின்றது.
அதுமாத்திரமன்றி அனைத்துவிதமான கருத்து வெளிப்பாடுகளையும் அடக்குவதற்கு ஐக்கிய தேசியக்கட்சி - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தினால் பொதுப்பாதுகாப்புச்சட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றமைக்குத் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுகள் மற்றுமொரு உதாரணமாகும் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM