குருந்தூர் மலை - பௌத்த மத அடையாளங்களை பாதுகாப்போமென வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம் : தமிழ் அரசியல் கட்சிகளுக்கு வீரசேகர எச்சரிக்கை !

Published By: Digital Desk 5

26 Sep, 2022 | 03:40 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நாட்டில் நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ள பின்னணியில் குருந்தூர் மலையில் பௌத்த மத வழிபாடுகளுக்கு தடையேற்படுத்தப்பட்டுள்ளமைக்கு ஒட்டுமொத்த தமிழ்களும் வெட்கப்பட வேண்டும்.

சிங்களவர்களுக்கு பொறுமையுண்டு. இனவாத செயற்பாடுகளில் ஈடுப்படுவதை தமிழ் அரசியல் கட்சிகள் தவிர்த்துக்கொள்ளாவிடின் சட்ட நடவடிக்கை எடுப்போம் என முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

குருந்தூர் மலை - பௌத்த மத அடையாளங்களை பாதுகாப்போம் என வலியுறுத்தி,பௌத்த தேரர்கள்,சிவில் அமைப்பினர் திங்கட்கிழமை (26) சுதந்திர சதுக்க வளாகத்தில் போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பௌத்த நாட்டில் பௌத்த மத பாரம்பரிய அடையாளங்கள் மற்றும் உரிமைகளை பாதுகாப்பது சிங்களவர்களின் கடமை மாத்திரமல்ல இலங்கையில் வாழும் அனைவரது கடமையாகும்.2000 வருடகாலம் பழமை வாய்ந்த குருந்தூர் மலையில் பௌத்த மத மரபுரிமைகளை பாதுகாப்பது அவசியமானது.

புழமை வாய்ந்த குருந்தூர் மலை விகாரையினை புனரமைத்து பௌத்த மத வழிபாடுகளில் ஈடுப்பட ஒருசில இனவாதிகள் இடமளிக்கவில்லை.இது முற்றிலும் வெறுக்கத்தக்கதொரு செயற்பாடாகும்.குருந்தூர் மலையில் பௌத்த மத மரபுரிமைகள் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளன.

வடக்கில் யுத்த தீவிரமடைந்த போது கொழும்பில் இந்து ஆலயங்களில் திருவிழாக்கள் இடம்பெற்றன. வீதியில் தேர் ஊர்வலம் சென்றன. சிங்களவர்களுக்கு பொறுமையுண்டு.நாட்டில் நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குருந்தூர் மலையில் பௌத்த மத வழிபாடுகளுக்கு தடையேற்படுத்தப்பட்டுள்ளமைக்கு ஒட்டுமொத்த தமிழர்களும் வெட்கப்பட வேண்டும்.

திருகோணேச்சரம் ஆலயத்தில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்றுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வலியுறுத்துகிறார்கள்.நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் உள்ள பௌத்த விகாரைகளுக்கு முன்பாக முஸ்லிம்,தமிழ் சமூகத்தினர் கடைகளை வைத்துள்ளார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இனவாதம் பேசிக் கொண்டு இனங்களுக்கிடையில் பிரச்சினைகளை தோற்றுவிக்கிறார்கள். கூட்டமைப்பினர் இனவாத செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறைக்கான ஆணையை வலுப்படுத்த...

2025-02-15 17:54:48
news-image

சட்டமா அதிபரின் ஆலோசனையை தற்காலிகமாக இடைநிறுத்துவது...

2025-02-15 20:32:09
news-image

இன்றைய வானிலை

2025-02-16 06:19:25
news-image

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின்...

2025-02-15 16:38:58
news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07