சட்டத்தின் பிரகாரமே ஆர்ப்பாட்டங்கள் கலைக்கப்படுகின்றன - பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ண

By Digital Desk 5

26 Sep, 2022 | 06:48 PM
image

(எம்.மனோசித்ரா)

சட்ட விரோதமாக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள் அரசியலமைப்பில் உள்ளன.

அதற்கேற்பவே பொலிஸாரும் முப்படையினரும் செயற்படுகின்றனர். ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்திற்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளமை பொறுத்தமற்றது என்பது தனது தனிப்பட்ட நிலைப்பாடாகும் என்று பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் திங்கட்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

நாட்டை ஆட்சி செய்யும் நிறைவேற்றதிகார ஜனாதிபதியின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் , ஜனாதிபதி செயலகத்தை கைப்பற்றிக் கொண்டு அராஜகமாக செயற்படுவது பொது மக்களையே பாதிக்கிறது.

காரணம் ஜனாதிபதி செயலகம் என்பது மக்களுக்கான சேவைகளில் ஈடுபடும் அரச நிறுவனமாகும். இதன் காரணமாகவே ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போது பொலிஸாருக்குக் கூட தங்களின் கடமைகளை ஆற்ற முடியாத நிலைமை காணப்பட்டது.

இது தொடர்பில் மக்கள் தொடர்ச்சியாக கேள்வியெழுப்பினர். அதன் பின்னரே மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக பொலிஸார் சட்டத்திற்கமைய நடவடிக்கைகளை எடுத்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான உரிமையைப் போன்றே, சட்டத்திற்கு முரணான முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே பொலிஸாரிடம் முன் அனுமதியைப் பெற்று , பொது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தாதவாறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

அரச நிறுவனங்கள் அல்லது திணைக்களங்களில் அரச உத்தியோகத்தர்களுக்கு தமது கடமைகளை இடையூறின்றி நிறைவேற்ற முடியவில்லை எனில் , அவற்றை பாதுகாக்க வேண்டியது பாதுகாப்புபடையினரின் பொறுப்பாகும்.

எனவே தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தியுள்ளார்.

இதற்கு முன்னர் பிரிவினைவாதம் மற்றும் மத பயங்கரவாதத்தினால் நாட்டில் அச்சுறுத்தலான சூழல் காணப்பட்டது. இவ்வாறான நிலைமைகள் மீண்டும் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும்.

இவற்றுக்கு மத்தியில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழு என்பவற்றைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி செயலகம் என்பது பாதுகாக்கப்பட வேண்டிய மிக முக்கிய இடமாகும். எனவே அதன் வளாகத்தில் ஆர்ப்பாட்டத்திற்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளமை பொறுத்தமற்றது என்பது எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காணாமல் போன வாழைச்சேனை மீனவர்கள் 64...

2022-11-28 11:28:14
news-image

என்னால் இலங்கை போன்ற ஒரு நிலையை...

2022-11-28 11:27:32
news-image

வலுவிழக்கும் உலக ஒற்றை அதிகார அரசியல்...

2022-11-28 11:08:41
news-image

அடுத்த வருடம் முதல் ஆரம்ப வகுப்பிலிருந்தே...

2022-11-28 10:59:58
news-image

போதைப்பொருள் கடத்தலிற்கு சிங்கப்பூர் பாணியில் மரணதண்டனை...

2022-11-28 11:05:01
news-image

மனைவியை தாக்கிய நபர் வைத்தியசாலைக்குச் சென்றபோது...

2022-11-28 11:14:36
news-image

கரையோரப் பாதை ரயில் மார்க்கத்தின் சமிக்ஞை...

2022-11-28 10:26:40
news-image

'தாய்நிலம்' எனும் ஆவணப்படத்தை பாருங்கள் -...

2022-11-28 11:10:10
news-image

அராலியில் கடல் அட்டை பண்ணை அமைப்பதற்கு...

2022-11-28 10:57:53
news-image

திருகோணமலை மாவட்டத்தில் மேலும் 3 புதிய...

2022-11-28 10:44:24
news-image

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் யாழில்...

2022-11-28 10:19:37
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-11-28 08:37:43