மரதனில் சொந்த உலக சாதனையை கிப்சோகே புதுப்பித்தார்

Published By: Digital Desk 5

26 Sep, 2022 | 03:07 PM
image

(என்.வீ.ஏ.)

ஜேர்மனியில் ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்ற பி எம் டபிள்யூ பேர்லின் மரதன் ஓட்டப் போட்டியை 2 மணித்தியாலங்கள், 01 நிமிடம் 09 செக்கன்களில் நிறைவு செய்த கென்ய வீரர் எலியுட் கிப்சோகே தனது முன்னைய உலக சாதனையை 30 செக்கன்களால் முறியடித்தார்.

நான்கு வருடங்களுக்கு முன்னர் பேர்லின் நிலைநாட்டிய 2 மணி. 01 நி. 09 செக்கன்கள் என்ற தனது சொந்த சாதனையையே கிப்சோகே  முறியடித்துள்ளார்.

இந்த வெற்றியுடன் இதுவரை அவர் பங்குபற்றிய 17 மரதன் போட்டிகளில் 15 வெற்றிகளை ஈட்டியுள்ளார்.

மரதன் ஓட்டப் போட்டியின் சரி அரைவாசி தூரத்தை 59.51 செக்கன்களில் கிப்சோகே பூர்த்தி செய்ததால் முழு மரதன் தூரத்தை முதலாவது நபராக 2 மணித்தியாலங்களுக்குள் நிறைவுசெய்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவரால் அதனை ஒரு நிமிடம் 10 செக்கன்களால் நிறைவேற்ற முடியாமல் போனது.

அப் போட்டியில் கிப்சோகேயின் சக நாட்டவரான மார்க் கோரிர் (2:05:58) இரண்டாம் இடத்தையும் எதியோப்பிய வீரர் டாடு அபேட் (2:06:28) மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

இதேவேளை, பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் எதியோப்பிய வீராங்கனை டிகிஸ்ட் அசேபா (2:15:37) தனது சொந்த நாட்டுக்கான தேசிய சாதனையுடன் முதலாம் இடத்தைப் பெற்றார். போட்டி நடைபெற்ற இடத்துக்கான புதிய சாதனையை நிலைநாட்டிய டிகிஸ்ட் அசேபா, வரலாற்றில் 3ஆவது வேகமான நேரத்தைப் பதிவுசெய்தார்.

பெண்கள் பிரிவில் கென்யாவின்   உலக சாதனை வீராங்கனை ப்றிகிட் கொஸ்கேய் (2:14:04) இரண்டாம் இடத்தையும் பிரித்தானிய வீராங்கனை பாவ்லா ரெட்க்ளிவ் (2:15:25) மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நேபாளத்துக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை;...

2024-06-15 16:23:37
news-image

சமரி அத்தபத்தவுக்கு மீண்டும் ஐசிசி விருது...

2024-06-15 10:36:16
news-image

அமெரிக்க - அயர்லாந்து போட்டி மழையால்...

2024-06-15 06:57:40
news-image

ஆப்கானிஸ்தன் உள்ளே ! நியூஸிலாந்து வெளியே...

2024-06-14 13:52:46
news-image

பங்களாதேஷின் சுப்பர் 8 வாய்ப்பை ஷக்கிப்...

2024-06-14 01:42:11
news-image

நிறுத்தக் கடிகார விதிகளின் பிரகாரம் அபராதம்...

2024-06-13 17:39:33
news-image

சுப்பர் 8 சுற்றில் மேற்கிந்தியத் தீவுகள்;...

2024-06-13 11:11:44
news-image

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டி நியூஸிலாந்துக்கு...

2024-06-13 01:48:40
news-image

ஐக்கிய அமெரிக்காவை வெற்றிகொண்ட இந்தியா சுப்பர்...

2024-06-13 01:03:23
news-image

பாகிஸ்தானின் தலைவிதியைத் தீர்மானிக்கவுள்ள இந்தியா -...

2024-06-12 14:45:17
news-image

நமிபியாவை வீழ்த்திய அவுஸ்திரேலியா 2ஆவது அணியாக...

2024-06-12 10:16:02
news-image

கடும் மழையினால் இலங்கையின் சுப்பர் 8...

2024-06-12 09:55:49