பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு பிரிட்டன் நிதியுதவி

By Digital Desk 5

26 Sep, 2022 | 06:44 PM
image

(நா.தனுஜா)

மிகமோசமான பொருளாதார நெருக்கடியினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கையர்களுக்கு அவசியமான 3 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான அத்தியாவசிய உணவு மற்றும் விவசாய உதவிகளை வழங்குவதாக பிரிட்டன் அறிவித்திருக்கின்றது.

'இலங்கை மக்களில் மூன்றிலொரு பங்கினர் நாளாந்தம் உணவைப் பெற்றுக்கொள்வதிலேயே நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருப்பதுடன் எரிபொருள், மின்சக்தி, மருந்துப்பொருட்களுக்கான தட்டுப்பாட்டையும் எதிர்கொண்டிருக்கின்றனர்.

உலகிலேயே உணவுப்பணவீக்கம் உயர்வாகக் காணப்படும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 5 ஆவது இடத்தில் இருப்பதுடன் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் அரிசியின் விலை 150 சதவீதத்தினால் உயர்வாகக் காணப்படுகின்றது' என்று பிரிட்டன் சுட்டிக்காட்டியிருக்கின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அமர்வின்போது வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்த பிரிட்டனின் மத்திய கிழக்கு, தெற்காசியா மற்றும் ஐக்கிய நாடுகள் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட், மேற்குறிப்பிட்டவாறு 3 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான உதவிகளை வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த நிதியுதவியானது செஞ்சிலுவை சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் முகவரமைப்புக்களின் ஊடாக வழங்கப்படவிருக்கும் அதேவேளை, அதன்மூலம் உணவு, விதைகள் என்பவற்றுக்கான கிடைப்பனவு உறுதிசெய்யப்படுவதுடன் பாலியல் மற்றும் பால்நிலைசார் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினருக்கும் அவசியமான உளநல ஆலோசனைகள் வழங்கப்படும் என்று பிரிட்டன் தெரிவித்துள்ளது.

இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் தாரிக் அஹமட், 'மிகவும் சவாலானதொரு சூழ்நிலைக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கை மக்களுக்கு பிரிட்டன் ஆதரவு வழங்கும்.

தற்போதைய நெருக்கடி மிகவும் கரிசனைகளைத் தோற்றுவித்திருப்பதுடன், அதன்விளைவாகப் பலரும் உதவிகள் தேவைப்படும் நிலையில் உள்ளனர்.

எனவே நாம் பின்தங்கிய நிலையில் இருப்போருக்கு அவசியமான 3 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான உயிர்காக்கும் உதவிகளை வழங்குவதுடன் இலங்கைக்கு உதவுவதை முன்னிறுத்தி சர்வதேசப்பங்காளிகளுடன் தொடர்ந்து இணைந்து செயற்படுவோம்' என்று உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதை தனியார்மயப்படுத்தல் என...

2022-12-08 16:33:06
news-image

ஜனாதிபதி விரும்பினால் அமைச்சரவையில் மாற்றம் -...

2022-12-08 16:30:49
news-image

கூட்டணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார் வேலுகுமார் -...

2022-12-08 22:00:49
news-image

பாடசாலை விடுமுறை குறித்த விசேட அறிவிப்பு 

2022-12-08 21:38:21
news-image

தமிழ் அரசியல் கைதிகளை ஒரே தடவையில்...

2022-12-08 15:23:26
news-image

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது சிறந்த...

2022-12-08 14:58:05
news-image

ஊழல் மோசடி முடிவுக்கு வரும் வரை...

2022-12-08 18:39:48
news-image

அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர்கள் தெரிவு பெரும்பான்மை...

2022-12-08 18:41:55
news-image

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவை கலைத்துவிட வேண்டும் -...

2022-12-08 13:39:41
news-image

6 கோடி ரூபா பெறுமதியான தேங்காய்...

2022-12-08 18:38:26
news-image

2023 ஆம் ஆண்டுக்கான வரவு -...

2022-12-08 19:04:07
news-image

மக்களுக்கு கஷ்டமாக இருந்தாலும் மின் கட்டணத்தை...

2022-12-08 18:17:53