பண மோசடி வழக்கு ; நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு பிணை

By T. Saranya

26 Sep, 2022 | 02:59 PM
image

இலங்கையில் பிறந்த பொலிலிவூட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு பண மோசடி வழக்கில் பிணை வழங்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாக கூறி மோசடி செயலில் ஈடுபட்டு வந்தார். 

2017 ஆம் ஆண்டு இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக டி.டி.வி. தினகரன் சார்பில் தேர்தல் கமிஷனுக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற போது அவர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

சுகேஷ் சந்திரசேகர் ஏற்கனவே பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது 2 தொழில் அதிபருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

அப்போது கணவருக்கு பிணை பெற்று தருவதாக கூறி சுகேஷ் சந்திரசேகர் தொழில் அதிபர் மனைவியிடம் இந்திய மதிப்பில் 200 கோடி ரூபாய் செய்துள்ளார். இதையடுத்து அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சுகேஷ், அவரது மனைவி உள்ளிட்டோர் மீது அமுலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. 

இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில்  நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரையும் சேர்த்துள்ளது. 

மோசடி பணத்தில் சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலினுக்கு  விலை உயர்ந்த நகைகள், பரிசு பொருட்களை வாங்கி கொடுத்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

சுகேஷ் சந்திரசேகரின் குற்றப் பின்னணி தெரிந்து இருந்தும் அவருடன் ஜாக்குலின் பழகியதுடன் பரிசு பொருட்களை பெற்றுள்ளார் என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

சுகேஷ் சந்திரசேகரை நடிகை ஜாக்குலினுக்கு அறிமுகம் செய்துவைத்த பிங்கி இராணி என்பவர் பெயரும் குற்றப்பத்திரிக்கையில் இடம்பெற்றிருந்தது. இது தொடர்பாக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு பொலிஸார் நடிகை ஜாக்குலின், பிங்கி இராணி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த வழக்கில் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு பொலிஸில் ஆஜராகி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் விளக்கம் அளித்தும் வருகிறார். 

இந்நிலையில், ரூ.200 கோடி மோசடி வழக்கில் இன்று நேரில் ஆஜராகும்படி நடிகை ஜாக்குலினுக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்  ஆஜராகுமாறு உத்தரவிட்டது. 

இதையடுத்து, அவர் நீதிமன்றில் இன்று (26) ஆஜரானார். இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றில் விசாரணை நடைபெற்றபோது தனக்கு வழக்கில் பிணை வழங்கும்படி ஜாக்குலின் மனு தாக்கல் செய்தார். 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி நடிகை ஜாகுலின் பெர்னாண்டசுக்கு இடைக்கால பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

இந்திய மதிப்பில் 50 ஆயிரம் ரூபாய் பிணைத்தொகையை செலுத்தி பிணை பெற்றுக்கொள்ளலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கை ஒக்டோபர் 22 ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்