கபடி சுற்றுப்போட்டியொன்றில் கலந்து கொண்டவர்களுக்கு, கழிவறையில் உணவை வைத்திருந்து பரிமாறிய சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து அதிகாரி ஒருவர் சேவையலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தின் 16 வயதுக்குட்டோருக்கான கபடி சுற்றுப்போட்டி ஷாரன்பூர் நகரிலுள்ள கலாநிதி பி.ஆர். அம்பேத்கார் அரங்கில் அண்மையில் நடைபெற்றது. சுமார் 300 சிறுவர்கள், சிறுமியர்கள் இப்போட்டிகளில் பங்குபற்றினர்.
இப்போட்டியாளர்களுக்கான தங்குமிடம், உணவுக்கான ஏற்பாடுகள் மேற்படி அரங்கிலேயே செய்யப்பட்டிருந்தன. ஆனால், சுகாதாரமின்மை மற்றும் தரமற்ற உணவுகள் குறித்து போட்டியாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர் என உள்ளுர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கழிவறைக்குள் உணவுப் பாத்திரங்களை வைத்திருந்து, அதிலிருந்து போட்டியாளர்களுக்கு உணவு பரிமாறும் காட்சிகள் அடங்கிய வீடியோவொன்று சமூகவலைத்தளங்களில் வெளியானதையடுத்து. இவ்விடயம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிறுமிகளும் சிறுவர்களும், கழிவறைக்கு வந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த பாத்திரங்களிலிருந்து உணவை எடுத்துச் செல்லும் காட்சிகள் அவ்வீடியோவில் இடம்பெற்றிருந்தன.
இதையடுத்து உத்தரபிரதேச அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துடன், ஷாரன்பூர் பிராந்திய விளையாட்டுத்துறை அதிகாரி பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த விளையாட்டுத் துறை அதிகாரிகள் இது தொடர்பாக கூறுகையில், போட்டிகளில் பங்குபற்றும் அணிகள் முதல் நாளிலேயே அரங்குக்கு வந்துவிட்டதாகவும், முதல் நாளில் எஞ்சிய உணவை போட்டியாளர்களுக்கு அடுத்த நாள் பரிமாற வேண்டாம் என சமையலுக்குப் பொறுப்பானவர்களுக்கு தான் பணிப்புரை வழங்கியிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
புதிய உணவுடன் கலக்கப்படாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்காகவே முதல் நாள் எஞ்சிய உணவு கழிவறையில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார் என ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM