2023 இல் குவாட் அமைப்பின் கூட்டத்தை டில்லியில் நடாத்த ஏற்பாடு

Published By: Digital Desk 5

26 Sep, 2022 | 12:58 PM
image

குவாட் அமைப்பின் அடுத்த வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் டெல்லியில் நடைபெறவுள்ளது.

குவாட் அமைப்பின்  பலதரப்பு ஒத்துழைப்பிற்கான தொலைநோக்கு இந்தோ-பசிபிக் முழுவதிலும் உள்ள மக்களின் நலனுக்காக செயல்-சார்ந்த ஈடுபாட்டை முன்னிறுதிய என குவாட் அமைப்பின் வெளிவிவகார அமைச்சர்கள்  வெளியிட்டுள்ள  கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பிளிங்கன் மற்றும் வெளியுறவு அமைச்சர்களான ஆஸ்திரேலியா, பென்னி வோங், இந்தியா, எஸ் ஜெய்சங்கர் மற்றும் ஜப்பான், ஹயாஷி யோஷிமாசா ஆகியோர் நியூயார்க் நகரில் 77 வது ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தில் பங்குப்பற்றிய நிலையில், குவாட் அமைப்பின் ஒன்று கூடலையும் நடத்தியுள்ளனர்.

 சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக்கை முன்னேற்றுவதற்கு ஆதரவாக குவாட் பலதரப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவது குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டது.

சர்வதேச சட்டம், அமைதி மற்றும் கடல்சார் களத்தில் உள்ள பாதுகாப்பு ஆகியவை இந்தோ-பசிபிக் வளர்ச்சி மற்றும் செழுமைக்கு முக்கியமாகின்றதாக குறிப்பிட்டுள்ளனர்.

தற்போதைய நிலையை மாற்ற அல்லது பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிக்க முயலும் எந்தவொரு ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளையும் கடுமையாக எதிர்க்கிறோம்.

ஆசியான் ஒற்றுமை மற்றும் மையத்தன்மை, ஆசியான் தலைமையிலான பிராந்திய கட்டிடக்கலை மற்றும் இந்தோ-பசிபிக் மீதான ஆசியாவின் பார்வையை நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றுக்கான அசைக்க முடியாத ஆதரவையும் நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.

விதிகளின் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்குமுறை உள்ள பிராந்தியம்தான் குவாடின் பார்வையாகும். சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி, ஜனநாயக விழுமியங்கள், சச்சரவுகளுக்கு அமைதியான தீர்வு, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகிய கோட்பாடுகள் மதிக்கப்படுவதாக கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08