(க.கிஷாந்தன்)

"ஈடோஸ்" இலங்கை பொருளாதார அபிவிருத்தி அமைப்பு ஊடாக  மஸ்கெலியாவில் இயங்கிவரும் முன் பள்ளி பாடசாலையின் 11ஆவது ஆண்டு விழாவும் சிறார்களின் கலை நிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு விழாவும் 19.11.2016 அன்று சனிக்கிழமை  காலை, மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாதர் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. 

ஈடோஸ் அமைப்பின் செயலாளரும் முன்னால் யாழ்ப்பாண மா  நகரசபை உறுப்பினருமான  இரா.சங்கையா தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில், தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரி பிரதம அதிதியாக கலந்துகொண்டார். 

இதன் போது மதத் தலைவர்களுடன் மஸ்கெலியா பிரதேசத்தின் முக்கியஸ்தர்கள்,முன் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த வைபவத்தில் ஆங்கில கல்வி அறிவு பரீட்சையில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் முன்பள்ளி மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் கலை நிகழ்வுகள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.