ஜப்பான், பிலிப்பைன்ஸ் நோக்கி புறப்பட்டார் ஜனாதிபதி ரணில் : பதில் அமைச்சர்களும் நியமனம்

By Priyatharshan

26 Sep, 2022 | 06:57 AM
image

உத்தியோகபூர்வ  விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை (26)  ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு பயணமானார். 

முதலில் ஜப்பானுக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ  விஜயத்தை மேற்கொள்ளும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜப்பானின் முன்னாள் பிரதமர்  சின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளவுள்ளார்.

இதனையடுத்து ஜப்பானிய பிரதமர், வெளிவிவகார அமைச்சர், நிதியமைச்சர் ஆகியோருடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இருதரப்பு கலந்துரையாடல்களை  மேற்கொள்ளவுள்ளார்.

அதன்பின்னர், ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்களின் கூட்டத்திற்கு தலைமை தாங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் 28 ஆம் திகதி பிலிப்பைன்ஸ் செல்கின்றார்.

இதன்போது பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பொங்பொங் மார்கஸ் (Bongbong Marcos) மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவா (Masatsugu Asakawa)  ஆகியோருடன் ஜனாதிபதி  பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் விஜயங்களை  நிறைவு செய்துகொண்டு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 30 ஆம் திகதி நாடு திரும்புவார். 

ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க, சர்வதேச அலுவல்கள் பணிப்பாளர் தினுக் கொலம்பகே, ஊடக பணிப்பாளர் ஷானுக்க கருணாரத்ன,  நிலைபெறுதகு அபிவிருத்தி தொடர்பான பணிப்பாளர் ரந்துல அபேவீர, ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோர் இந்த விஜயத்தில் பங்கேற்கின்றனர். 

இதேவேளை  ஜனாதிபதியின் பிலிப்பைன்ஸ் விஜயத்தில் திறைசேரி செயலாளரும் இணைந்து கொள்ள உள்ளார். 

பிலிப்பைன்ஸ் விஜயத்தில் தினுக் கொலம்பகே மற்றும் ரந்துல அபேவீர பங்கேற்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பதில் அமைச்சர்களும் நியமனம்

இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்துள்ள நிலையில், ஜனாதிபதி வெளிநாட்டில் இருக்கும் சமயத்தில்  பணியாற்றுவதற்காக, தனக்குக் கீழ் உள்ள அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்களை நியமித்துள்ளார். 

குறித்த அமைச்சுக்களின்  இராஜாங்க அமைச்சர்களே இவ்வாறு பதில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, பதில் பாதுகாப்பு அமைச்சராக  ராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை பதில் அமைச்சராக இராஜாங்க அமைச்சர்  ஷெஹான் சேமசிங்க, முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சராக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, தொழில்நுட்ப பதில் அமைச்சராக இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், பெண்கள் சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சராக இராஜாங்க அமைச்சர் அனுபா பெஸ்குவல் ஆகியோர்  நியமிக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் தீ விபத்து

2022-12-08 13:48:01
news-image

நாமலுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள் ஒத்திவைப்பு

2022-12-08 13:37:40
news-image

புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்ய...

2022-12-08 13:34:43
news-image

பசறையில் பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

2022-12-08 13:18:14
news-image

தனது தங்க நகையை கொள்ளையிட்டவர்களுடன் சூட்சுமமாக...

2022-12-08 13:06:52
news-image

கசினோ சட்டமூலத்துக்கு நிபந்தனையுடன் அனுமதி

2022-12-08 12:47:02
news-image

தென்கிழக்காசியாவின் 8 நாடுகளில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள்...

2022-12-08 12:15:02
news-image

சாய்ந்தமருது பிரதேசத்திற்கான எல்லை நிர்ணய அறிக்கை...

2022-12-08 12:08:58
news-image

வெல்லாவெளியில் யானை தாக்கியதில் பெண் உயிரிழப்பு

2022-12-08 13:31:04
news-image

74 வயதான மனைவியை மண்வெட்டியால் தாக்கிக்...

2022-12-08 11:49:47
news-image

ஆபத்தான நோய்களினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் உயிரிழப்பது...

2022-12-08 11:45:27
news-image

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு இவ்வருடம்...

2022-12-08 11:59:18