யாழ்.மாவட்டத்தில் உயிர்கொல்லியான ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்ய சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர் என பொலிஸார் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற சிறுவர் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டது.
யாழ்.மாவட்டத்தில் அதிகளவில் சிறுவர்கள், பாடசாலை மாணவர்கள் ஹெரோயின் உள்ளிட்ட அபாயகரமான போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் பலர் அதற்கு அடிமையாக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக பெற்றோரை இழந்த பிள்ளைகள், பெற்றோரால் அதிகம் கவனிக்கப்படாத பிள்ளைகள், பெற்றோர் வெளிநாடுகளில் உள்ள சிறுவர்கள் இதற்கு அதிகம் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இவற்றைக் கட்டுப்படுத்த பொலிஸார் துரிதகதி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் எனவும் அதற்கு அனைத்துத் தரப்பினதும் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM