போராட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது - முன்னிலை சோசலிசக் கட்சி

Published By: T Yuwaraj

25 Sep, 2022 | 10:04 PM
image

 (எம்.வை.எம்.சியாம்)

 போராட்டங்கள் மீது அடக்குமுறையை பிரயோகித்தமை மற்றும் அவர்களுக்கு எதிராக கடுமையான தாக்குதல் நடத்தியமை தொடர்பில் நாம்  வன்மையாக கண்டிக்கிறோம்.

மேலும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட பொலிஸார் இது தொடர்பில்   பொறுப்பு கூற வேண்டி ஏற்படும் என்று

 முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து சோசலிச இளைஞர் சங்கத்தினால் நேற்றுமுன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்பு பேரணியை கலைப்பதற்கு பொலிஸாரினால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் 

மேற்கொள்ளப்பட்டது. மேலும் போராட்டகாரர்கள்  பொலிஸாரினால் கடுமையாக தாக்கப்பட்டு இருந்தார்கள். இதனை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

இப்போராட்டம் அரசியல் யாப்பிற்கு அமைய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளுக்கு அப்பால் சென்று சட்டவிரோதமான முறையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டமல்ல. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண மற்றும் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தேசபந்து தென்னகோன் ஆகிய இருவருமே 

 இப்போராட்டத்தை கலைப்பதற்கும் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கும் மூலகாரணமாக செய்யப்பட்டுள்ளார்கள்.

 மேலும் அவர்கள் உத்தரவுக்கு அமைவாகவே அரசியலமைப்பை மீறி போராட்டகாரர்கள் மீது கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்டத்தை மீறி அவர்கள் உத்தரவுக்கு அமைவாக  செயற்பட்ட பொலிஸாருக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கின்றோம்.

இதனுடன் தொடர்புடைய அனைவருக்கும் அடிப்படை மனித உரிமை மீறியமை தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுப்போம். மேலும் அவர்களுக்கு தனிப்பட்ட வகையில் பொறுப்பு கூற வேண்டி ஏற்படும். எதிர்வரும் 

காலங்களில் மக்களின் போராட்டங்களை அடக்குவதற்கு முயற்சிக்கும் போது ஒன்றுக்கு இரண்டு தடவைகள் சிந்திக்க வேண்டி ஏற்படும்.

அரசாங்கத்தினால் உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்த முயல்வது ஏன் எனில் நாட்டு மக்களால் முழு நாடும் போராட்டக்களமாக மாறிவிடும் எனும் அச்சத்திலாகும். அரசாங்கம் அச்சமடைந்தமை தொடர்பில் நாம் மிகவும் மகிழ்வடைகிறோம்.

நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுக்கிறோம்  அரசாங்கம் மற்றும் அரசாங்கத்தை வழிநடத்தும் தரப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த அச்சத்தை தொடர்ச்சியாக கொண்டு செல்ல முயற்சி செய்யுங்கள். நாம் ஆட்சியாளர்களிடம் மேலும் ஒன்றை கேட்டுக்கொள்கிறோம்.

இது போன்று வேடிக்கையான விடயங்களை கொண்டு சட்டங்களை பிறப்பிப்பது மற்றும் அமைதி வழிப்போராட்டங்கள் தொடர்பில்  அடக்குமுறைகளையும் மேற்கொள்வதை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லுங்கள் அப்போது தான்  அரசாங்கத்தின் பயத்தினை நாம் உணர்ந்து கொள்ள முடியும் என்றார்

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விசாரணைக்குச் சென்ற பொலிஸார் மீது தாக்குதல்...

2023-03-20 14:37:36
news-image

இலங்கையின் உணவு பாதுகாப்பு நிலை -...

2023-03-20 13:58:01
news-image

அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மா...

2023-03-20 13:32:11
news-image

நெற் செய்கையாளர்களுக்கு இலவசமாக பகிர்ந்தளிக்க 36...

2023-03-20 13:30:28
news-image

அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் புதிய உணவு...

2023-03-20 13:14:55
news-image

யாழில் கஞ்சா கடத்தலுக்கு மோட்டார் சைக்கிளைக்...

2023-03-20 12:28:42
news-image

மட்டக்களப்பு பூநொச்சிமுனை பாலம் திருத்தப்படாமையால் மக்கள்...

2023-03-20 12:19:55
news-image

இலங்கை மீனவர்கள் அறுவர் இந்தியாவில் கைது

2023-03-20 12:10:11
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தாதியர் விடுதியில்...

2023-03-20 12:52:07
news-image

இருவேறு வாகன விபத்துக்களில் ஒருவர் பலி...

2023-03-20 11:48:34
news-image

ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாவை பெண்கள் சக்தியே...

2023-03-20 13:18:53
news-image

பதுளை - பசறையில் 40 அடி...

2023-03-20 12:21:02