(எம்.மனோசித்ரா)
இலங்கை அரசியல் , சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் போது , சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பும் ஆதரவும் அவசியம் என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம் நாட்டை மீளக் கட்டியெழுப்பும் முயற்சியின் கீழ் , சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் மட்ட பேச்சுக்களில் கனிசமான புரிதல்கள் எட்டப்பட்டுள்ள என்றும் அவர் கூறியுள்ளார்.
ஐ.நா. பொதுசபையின் 77 ஆவது கூட்டத்தொடர் கடந்த சனிக்கிழமை நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்டு இலங்கை தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கி உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
வளர்முக நாடுகள் மற்றும் அவற்றின் பொருளாதாரம் மிகவும் சவால்களை எதிர்நோக்கியுள்ளன. அரசாங்கங்கள் கடன் மற்றும் பாரிய நிதி சரிவை எதிர்கொள்கின்றன. போதுமான மூலதனத்திற்கான அணுகல் நிலை இன்மையே இதற்கான காரணமாகும். இதனால் மக்கள் வறுமை, வேலையின்மை, பசி மற்றும் கல்வி சீர்குலைவு போன்ற நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
இதே வேளை இலங்கை அரசியல் , சமூகம் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்கையில் அதனை அடைவதற்கான முயற்சிகளுக்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அவசியமாகும். மேலும் நாட்டின் கருத்து சுதந்திரமானது புனிதமானது. எனினும் அது சட்டத்தின் வரம்புகளுக்குள் பயன்படுத்தப்பட வேண்டும் என்றார்.
இதே வேளை 'கொவிட் 19' குறித்து கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி , 'இலங்கையில் தடுப்பூசி வழங்கலானது உலக சுகாதார ஸ்தாபனம் எதிர்பார்த்த இலக்கையும் தாண்டியதாக அமைந்தது. எனினும் தொற்று நோயின் தாக்கம் பொருளாதார வீழச்சிக்கு நாடு முகங்கொடுக்க நேர்ந்தது.' என்றார்.
மேலும் இலங்கை பல தசாப்த காலமாக பயங்கரவாத நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்ட நாடாக காணப்படுகிறது எனக் குறிப்பிட்ட வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, பயங்கரவாதம் மற்றும் தீவிரவாத சிந்தனைகளை எதிர்ப்பதற்கு சட்டமியற்றும் நடவடிக்கைகள் மற்றும் சட்டத்தை அமுல்படுத்தும் பொறிமுறைகள் என்பவற்றுக்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் தெரிவித்தார்.
மேலும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பங்களிக்கும் வகையில் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் தனது பங்களிப்பை மேலும் வலுப்படுத்த இலங்கை எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM