மட்டக்களப்பில் வைத்தியரின் வீட்டில் கோழிகள், நாய் ஒன்றை திருடிய 5 மாணவர்கள் கைது

Published By: Vishnu

25 Sep, 2022 | 05:01 PM
image

(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்திலுள்ள வைத்தியர் ஒருவரின் வீட்டில் 10 கோழி , நாய் என்பற்றை தீருடிச்சென்ற உயர் தரத்தில் கல்வி கற்று வரும் 5 பாடசாலை மாணவர்களை கைது செய்து அவர்களது பெற்றோரை வரவழைத்து அவர்களை எச்சரித்து விடுவித்துள்ள சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

வைத்தியரின் வீட்டில் சம்பவதினமான வெள்ளிக்கிழமை இரவு உள்நுழைந்த 5 மாணவர்கள் வீட்டின் பின்பகுதியில் அமைந்துள்ள கோழிக் கூட்டில் இருந்த 10 கோழிகளை திருடிக் கொண்டிருந்த போது அங்கு வந்த நாய் ஒன்றையும் திருடிக்கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.

இது தொடர்பாக வைத்தியர் பொலிஸாருக்கு முறைப்பாடு தெரிவித்ததையடுத்து பொலிஸார் மேற்கொண்டுவந்த விசாரணையில் வைத்தியரின் வீட்டுக் கோழிகளை திருடிச் சென்ற பாடசாலை ஒன்றில் உயர்தரம் கற்றுவரும் 5 மாணவர்களை கைது செய்ததையடுத்து வைத்தியர் அவர்களை மன்னித்துவிடுமாறு கோரியதையடுத்து மாணவர்களின் பெற்றோரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து கைது செய்யப்பட்ட மாணவர்களை எச்சரித்து பிள்ளைகளை கவனிக்குமாறு பெற்றோருக்கு அறிவுரை கூறி விடுவித்துள்ளதாக தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

''நடுவே பாய வேண்டாம்'' பிரதி சபாநாயகரை...

2025-02-06 19:11:52
news-image

கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில்...

2025-02-06 14:33:26
news-image

புதிய முப்படைத் தளபதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர் 

2025-02-06 19:24:44
news-image

விசர்நாய்க்கடி நோய் உயிரிழப்புக்கள் வீழ்ச்சி ;...

2025-02-06 13:33:37
news-image

கொழும்பு லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளது

2025-02-06 18:56:37
news-image

வளி மாசடைதல் காரணமாக வருடாந்தம் சுமார்...

2025-02-06 18:41:20
news-image

சபாநாயகர், பிரதி சபாநாயகரைச் சந்தித்தார் துருக்கித்...

2025-02-06 18:19:22
news-image

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் காட்டு யானைகளின்...

2025-02-06 17:23:17
news-image

சிவனொளி பாதமலைக்கு யாத்திரை சென்றவர் சடலமாக...

2025-02-06 16:42:20
news-image

கொழும்பு - காக்கைதீவு பகுதியில் லயன்...

2025-02-06 16:41:19
news-image

பட்டாபுரம் கிராமத்தில் நீர் நிலையிலிருந்து ஆணின்...

2025-02-06 16:46:27
news-image

ஜனாதிபதி நிதியமானது உரிய சட்டத்திட்டங்களுக்கமைய செயற்படும்; ...

2025-02-06 16:22:55