பச்சிளம் குழந்தைகளை உறங்க வைப்பது சவாலானதா..?

By T Yuwaraj

25 Sep, 2022 | 04:41 PM
image

இன்றைய திகதியில் குழந்தைகளை பெற்ற இளம் தாய்மார்கள், அவர்களது பிள்ளைகள் இரவு நேரத்திலோ அல்லது பகல் நேரத்திலோ உறங்காமல் அழுது கொண்டிருந்தால்.., அதனை எதிர்கொள்வதில் பாரிய சங்கடங்களை சந்திக்கிறார்கள். இதற்கு மகப்பேறு மருத்துவ நிபுணர்கள் சில ஆலோசனைகளை அளிக்கிறார்கள்.

பொதுவாக குழந்தை பிறந்த மூன்று மாதங்கள் வரை, குழந்தையின் தூக்கம் என்பது 30 நிமிடங்கள் முதல் இரண்டு மணி தியாலங்கள் வரை மட்டுமே இருக்கும். இது பொதுவான வரையறை. இதனை மகப்பேறு மருத்துவ நிபுணரின் ஆலோசனையுடன் தெரிந்து கொண்டு, பச்சிளம் குழந்தைகளை உறங்க வைக்கலாம். பொதுவாக வளர்ந்த ஆண்கள் அல்லது பெண்களுக்கு, அவர்களின் இரத்த சர்க்கரை அளவானது சீராக இருக்கும்போது அவர்களது உறக்கமும் இயல்பாக இருக்கும். இரத்த சர்க்கரையின் அளவு குறையும் போது, உறக்கமின்மை பாதிப்பும் ஏற்படக்கூடும். இதனால் தான் எம்முடைய முன்னோர்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டிய நேரத்தை கணக்கிட்டு, இரண்டு மணி தியாலத்திற்கு ஒரு முறை பாலூட்ட வேண்டும் என பரிந்துரைப்பர்.

சில தருணங்களில் உறக்கத்தில் இருக்கும் அல்லது உறங்கிக் கொண்டிருக்கும் பிள்ளைகள், திடீரென எழுந்து அழத் தொடங்கும். அதனை எப்படி சமாதானப்படுத்துவது அல்லது அழுகையை நிறுத்துவது என்பது பெரும்பாலான நேரங்களில் தாய்மார்களுக்கு தெரிவதில்லை . எத்தகைய உத்தியை கையாள வேண்டும் என்பதில் குழப்பம் இருக்கிறது. முதலில் இதற்கான மருத்துவ காரணங்களை தெரிந்து கொள்ளுங்கள். குழந்தைகள் திடீரென எழுந்து அழத் தொடங்கினால், அவர்களுடைய உடலில் கார்டிஸோல் மற்றும் அட்ரீனல் எனும் ஹோர்மோன்கள் இயல்பான அளவைவிட, கூடுதலாக உற்பத்தி ஆகின்றன அல்லது அதனால் பாதிப்பு ஏற்பட்டு, குழந்தைகளின் உறக்கம் பாதிக்கப்படுகிறது. இத்தகைய தருணங்களில் தாய்மார்கள் அவர்களது குழந்தையை தங்களது தோளில் வைத்துக் கொண்டு, ஐந்து நிமிடம் முதல் 10 நிமிடம் வரை நடை பயிற்சி செய்தால், அந்த ஹோர்மோன்களின் வீரியம் குறைந்து, மீண்டும் குழந்தை உறங்கத் தொடங்கும்.

அதே தருணத்தில் குழந்தைகள் திடீரென உறக்கத்திலிருந்து எழுந்து அழத் தொடங்கினால், அவர்களின் டயாபரை ஒரு முறை பரிசோதித்துப் பாருங்கள். அதில் ஏதேனும் மாற்ற வேண்டியது இருந்தால், அதனை மாற்றினாலும் குழந்தை மீண்டும் உறங்கத் தொடங்கும்.

குழந்தை உறங்கிக் கொண்டிருக்கும்போது தாய்மார்கள் சமையலறையில் நெடிமிக்க மசாலாக்களை பயன்படுத்தினாலோ அல்லது ஊதுபத்தி, சாம்பிராணி போன்ற வாசனை திரவியங்களைப் பயன்படுத்தி காற்றில் கரைந்தாலும், அதன் காரணமாகவும் அவர்களின் உறக்கம் கலைந்து அழத் தொடங்குவார்கள். இதனையும் துல்லியமாக அவதானித்து தவிர்த்தால், குழந்தைகள் உறங்குவார்கள்.

டொக்டர் தனசேகர்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குழந்தையின் நாக்கை சுத்தம் செய்யும்போது...

2022-12-02 10:55:30
news-image

துளசி க்ரீன் டீ குடிப்பதால் கிடைக்கும்...

2022-11-30 16:11:43
news-image

தனியாக உணவு உட்கொண்டால் இதயக்கோளாறு நிச்சயமாம்...

2022-11-30 16:26:14
news-image

க்ளா ஹேண்ட் எனப்படும் சுண்டு விரல்...

2022-11-30 13:49:13
news-image

தாய்ப்பால் சுரப்பை பாதிக்கும் மன அழுத்தம்

2022-11-30 15:59:38
news-image

சீனிக்கு பதிலாக தேனா?

2022-11-30 16:21:16
news-image

ஒரு நாளைக்கு 2 லீற்றர் தண்ணீர்...

2022-11-30 10:30:45
news-image

குருதிநெல்லியின் மருத்துவ குணங்கள்

2022-11-27 12:03:46
news-image

வேதிப்பொருட்களால் அதிகம் பாதிக்கப்படும் குழந்தைகள்

2022-11-25 13:17:56
news-image

ரைனிட்டிஸ் மெடிகமென்டோசா எனும் மூக்கடைப்பு பாதிப்பிற்கான...

2022-11-25 10:44:45
news-image

குழந்தை வயிற்று வலியால் அழுகிறதா?

2022-11-24 17:29:31
news-image

மலச்சிக்கலா ? அலட்சியம் காட்டினால் மூலநோய்...

2022-11-24 12:39:37