பெரும்போக அறுவடையின் பின் அரிசி இறக்குமதிக்கான தேவை காணப்படாது - மஹிந்த அமரவீர

Published By: Digital Desk 5

25 Sep, 2022 | 09:21 PM
image

(எம்.மனோசித்ரா)

பெரும்போக அறுவடையின் பின்னர் நாட்டுக்கு அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்படாது. இவ்வாரத்திலிருந்து சகல பகுதிகளுக்கும் உரத்தை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும்.

இதன் போது இரண்டு ஏக்கருக்கும் குறைவான நிலப்பரப்பில் விவசாயத்தில் ஈடுபடுபவர்களுக்கு இலவசமாக யூரியா உரம் வழங்கப்படும் என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

 ஞாயிற்றுக்கிழமை (25) மல்வத்து பீட மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து உணவை உண்பதை விட , உள்நாட்டு விவசாயிகள் மீது நம்பிக்கை கொண்டு விவசாயத்தை மேம்படுத்துவதே சிறந்த திட்டமாகும்.

வரவுள்ள பெரும்போகத்தில் வெற்றிகரமாக விளைச்சலைப் பெற்றுக் கொள்வதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுப்போம்.

இந்த பெரும்போக அறுவடையின் பின்னர் வெளிநாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதி செய்வதற்கான எந்தவொரு தேவையும் கிடையாது.

இவ்வாரத்திலிருந்து சகல பகுதிகளுக்கும் உரத்தை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பமாகவுள்ளன.

2 ஏக்கருக்கும் குறைவான நிலப்பரப்பில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு யூரியா உரத்தினை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏனையோருக்கும் முன்னரைப் போன்று நிவாரண விலையில் உரத்தை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய உர மூடையொன்றை 10 000 ரூபாவிற்கு வழங்க எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51