தேசிய பாதுகாப்பிற்காகவே அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் : கலவரத்தின் ஊடாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது - நாமல்

By Vishnu

25 Sep, 2022 | 09:14 PM
image

(எம்.மனோசித்ரா)

தேசிய பாதுகாப்பு என்பது நாட்டு மக்களின் பாதுகாப்பாகும். அதனை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கு காணப்படுகிறது.

எனவே தான் அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. கலவரத்தினை ஏற்படுத்தி , அதன் ஊடாக பாராளுமன்றத்தைக் கைப்பற்றி ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்த எவரேனும் முயற்சிப்பார்களாயின் அந்த முயற்சி ஒருபோதும் வெற்றியளிக்காது என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

24 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

தேசிய சபை தொடர்பில் பாராளுமன்றத்தில் கலந்துரையாடல்களை முன்னெடுத்து சபாநாயகர் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வார்.

பொதுஜன பெரமுனவானது மக்கள் மத்தியில் கீழ் மட்டத்திலிருந்து ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் சிறந்த அனுவபத்தைக் கொண்டுள்ள கட்சியாகும்.

இது தொடர்பில் கட்சி மட்டத்திலும் , தேசிய சபையிலும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து உரிய நடவடிக்கைகளை எடுப்போம். ஏனைய கட்சிகள் இதற்கு ஒத்துழைப்பு வழங்காமை அவரவரின் தனிப்பட்ட தீர்மானமாகும். இது தொடர்பில் சபாநாயகருடன் கலந்துரையாடி அவர்கள் தீர்மானங்களை எடுப்பர்.

நாட்டில் தேசிய பாதுகாப்பு மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும். ஏதேனுமொரு வகைகயில் கலவரக்காரரர்கள் பாராளுமன்றத்தைக் கைப்பற்றுமிடத்து , நாட்டில் ஜனநாயகம் கேள்விக்குறியாக்கப்படும்.

சில கட்சிகள் கூட பாராளுமன்றத்தைக் கைப்பற்ற முயற்சித்தவர்களுக்கு தலைமை வகித்தன. இதனை எவரும் மறுக்க முடியாது. காரணம் குறித்த கட்சியின் உறுப்பினர்கள் அந்த இடத்தில் காணப்பட்டனர்.

எனவே தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கு காணப்படுகிறது. நாட்டு மக்களின் பாதுகாப்பே தேசிய பாதுகாப்பாகும்.

எனவே அதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி எடுப்பார். நாம் எந்த சந்தர்ப்பத்திலும் கலவரங்களில் ஈடுபடவில்லை. ஆர்ப்பாட்டங்களையும் பேரணிகளையுமே நடத்தியுள்ளோம்.

அன்று சுமார் 10 இலட்சம் மக்களை காலி முகத்திடலுக்கு அழைத்து வந்த போது , எம்மாலும் அவ்வாறு செயற்பட்டிருக்க முடியும்.

எனினும் நாம் அதனை செய்யவில்லை. கலவரத்தின் மூலம் அரசாங்கமொன்று அமைக்கப்பட வேண்டும் என்று நாம் எண்ணவில்லை.

பொதுஜன பெரமுன ஜனநாயக ரீதியில் செயற்படும் ஒரு கட்சியாகும். எனவே ஜனநாயக ரீதியில் அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பொதுஜன பெரமுனவின் தலைவராவார். அவரது தலைமைத்துவத்திலேயே நாம் கட்சியை மறுசீரமைப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பணி இடை நிறுத்தப்பட்டுள்ள வைத்தியர் சமல்...

2022-12-02 10:25:52
news-image

இரட்டைக் கொலை வழக்கில் இரட்டை மரண...

2022-12-02 10:28:09
news-image

அனலைதீவு துறைமுகத்தில் கடல் அட்டை பண்ணைக்கு...

2022-12-02 10:32:00
news-image

வருமான வரி கணக்கை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம்...

2022-12-02 10:32:49
news-image

2024 இல் 30 இலட்சம் சுற்றுலாப்பயணிகளை...

2022-12-02 09:07:32
news-image

யாழில் நெற்பயிர்கள் பொட்டாசியம் இன்மையால் நுனி...

2022-12-02 10:20:59
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-12-02 08:55:01
news-image

யாழ். வரணி குளத்தில் இருந்து சடலம்...

2022-12-02 09:03:04
news-image

நாட்டின் பல மாகாணங்களில் 75 மி.மீ....

2022-12-02 08:50:24
news-image

இலங்கை விவகாரங்களிற்கு தீர்வை காண்பதற்கு பிரிட்டன்...

2022-12-02 07:21:30
news-image

யாழில் டிக்டொக்கால் வந்தவினை ! மோட்டார்...

2022-12-02 06:09:05
news-image

நாடு முன்னேற்றமடைய கல்விக்கொள்கை நிலையானதாக அமைக்கப்பட்ட...

2022-12-01 19:38:14