சிங்கர் அறிமுகப்படுத்தும் Duo 2 in 1மடிகணினி மற்றும் Tab சாதனம்

Published By: Priyatharshan

19 Nov, 2016 | 12:34 PM
image

நீடித்து உழைக்கும் நுகர்வோர் சாதனங்களின் விற்பனையில் நாட்டில் முன்னிலை வகித்துவருகின்ற சிங்கர் ஸ்ரீலங்கா, இன்று சிங்கர் Duo 2 in 1 மடிகணினி மற்றும் Tab சாதனத்தை அறிமுகப்படுத்தி, அதன் மூலமாக தனது உற்பத்தி வரிசையில் மற்றுமொரு புத்தாக்கமான உற்பத்தியைச் சேர்ப்பித்துள்ளது. 

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்று வருகின்ற சிங்கர் டுகைநளவலடந கண்காட்சி நிகழ்வில் இந்த உற்பத்தி வைபவ ரீதியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

சிங்கர் ஸ்ரீலங்கா குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான அசோக பீரிஸ், சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் விற்பனை மற்றும் வர்த்தகத்துறை பணிப்பாளரான மகேஷ் விஜேவர்த்தன மற்றும் மைக்ரோசொப்ட் தென் கிழக்கு ஆசியா புதிய சந்தைகளுக்கான அசர் உபகரண உற்பத்தியாளர் துறைப் பணிப்பாளரான புபுது பஸ்நாயக்க ஆகியோர் இந்த உற்பத்தியின் அறிமுக வைபவத்தில் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இலங்கையில் வளர்ச்சிகண்டுவருகின்ற, ஆர்வம் கொண்ட வாடிக்கையாளர் தளத்திற்கு தொழில்நுட்பரீதியாக மேம்பட்ட, நவீன உற்பத்திகளை அறிமுகம் செய்து வைப்பதில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருகின்ற சிங்கர் நிறுவனத்தின் மற்றுமொரு புத்தாக்கமான அணுகுமுறையாக இந்த அறிமுகம் அமையப்பெற்றுள்ளது.

சிங்கர் Duo 2 in 1 மடிகணினியானது மடிகணினி வடிவம் மற்றும் tab சாதன வடிவம் என இரு வேறுபட்ட வடிவங்களில் வெவ்வேறாக அகற்றப்படக்கூடிய சிறப்பம்சத்தைக் கொண்டுள்ளது. இதன் மூலமாக பாவனையாளர்கள் தமது தேவையைப் பொறுத்து உபயோகத்திற்கு இலகுவான வழியில் தமது மடிகணினியை உபயோகிக்க முடியும். இந்த மடிகணினி அசல் வின்டோஸ் 10 செயற்பாட்டுத் தொகுதியுடன் Intel Z8300 Quad Core processor இனைக் கொண்டுள்ளது. 2GB மெமரி, 32GB உள்ளக தேக்ககம், 10.1” 10.1” IPS முகத்திரை கொள்ளக்கூடிய வகையில் 10 விரல்களாலும் இயக்கப்படக்கூடிய தொடுகைத் திரை 2 Mega Pixel கமரா Wi-Fi மற்றும் Bluetooth ஆகிய தொழில்நுட்ப அம்சங்களையும் கொண்டுள்ளது.                           

சிங்கர் ஸ்ரீலங்கா குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திரு. அசோக பீரிஸ் அவர்கள் புதிய உற்பத்தியின் அறிமுகம் தொடர்பில் கருத்து  வெளியிடுகையில்,

 “ஒரு நிறுவனம் மற்றும் வர்த்தகநாமம் என்ற வகையில் எமது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான புத்தாக்கத்தை அறிமுகப்படுத்தி, எமது உற்பத்தி மற்றும் சேவை வழங்கலை மேம்படுத்தி வருகின்றோம். எமது உற்பத்திகள் மற்றும் தீர்வுகள் மூலமாக இலங்கையை தொழில்நுட்ப அறிவுமிக்க ஒரு நாடாக சிங்கர் எப்போதும் நிலைநிறுத்தி வந்துள்ளதுடன், டிஜிட்டல் தொழில்நுட்பத்தை உள்வாங்கும் ஒரு தேசம் என்ற வகையில் ஒவ்வொரு பிரஜையும் எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கும் சமயத்தில்ரூபவ் தொழில்நுட்பம் அதில் மிக முக்கிய பங்கு வகிக்குமென நாம் நம்புகின்றோம்.” என்று குறிப்பிட்டார்.

சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் துறை பணிப்பாளரான குமார் சமரசிங்க குறிப்பிடுகையில்,

“தொழில்நுட்பரீதியாக மேம்பட்ட, நவீன Duo 2 in 1 மடிகணினி உற்பத்தி வரிசையை இலங்கையில் அறிமுகம் செய்து வைப்பதையிட்டு பெருமகிழ்ச்சி அடைந்துள்ளோம். உலகின் மிகச் சிறந்த, பெருமதிப்பு பெற்ற உற்பத்தி வரிசைகளை நியாயமான விலைகளிலும்,ஈடுஇணையற்ற சேவையுடனும் அனைத்து இலங்கை மக்களும் பெற்றுக்கொள்ள வழிவகுப்பதில் சிங்கர் தனித்துவமான ஒரு பாராம்பரியத்தைக் கொண்டுள்ளது. தொழில்சார்ந்தவர்கள் மற்றும் மாணவர்களுக்கு மிகவும் உகந்த ஒரு தீர்வாக இந்த புதிய உற்பத்தி விளங்கும்” எனக் கூறினார்.

சிங்கர் நிறுவனம் அண்மையில், மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் முதன்மை வாடிக்கையாளர் அந்தஸ்தைப் (Named Account) பெற்றுள்ளது. ஒரு முதன்மை வாடிக்கையாளர் என்ற வகையில், பாரிய அளவிலான பல்தேசிய நிறுவனங்களுக்கு மைக்ரோசொப்ட் ஸ்ரீலங்கா நிறுவனத்திடமிருந்து கிடைக்கப்பெறும் எண்ணற்ற சலுகைகளை பெற்றுக்கொள்வதற்கு தற்போது சிங்கர் நிறுவனத்தையும் அவர்கள் நாட முடியும். இந்த மூலோபாய நடவடிக்கையின் மூலமாக, இந்த உடன்படிக்கையின் கீழ் மைக்ரோசொப்ட் நிறுவனத்துடன் இணைந்துள்ள உலகின் மிகச் சிறந்த வர்த்தகநாமங்களுடன் சிங்கரும் தற்போது இணைந்துள்ளது.

மைக்ரோசொப்ட் பங்காளர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்ற மிகச் சிறந்த நடைமுறைகளை நிறுவனம் பேணி வருவது தொடர்பில் இந்த அந்தஸ்தானது சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனத்திற்கு மற்றுமொரு முக்கியத்துவம் வாய்ந்த சாதனை இலக்காக மாறியுள்ளதுடன், அது வர்த்தகநாமத்தின் சர்வதேச அளவிலான பிரபலத்தை மேம்படுத்த வழிவகுக்கும்.

நாடளாவியரீதியில் வியாபித்துள்ள 400 இற்கும் மேற்பட்ட காட்சியறைகள், அதற்கு ஈடான விற்பனைக்குப் பின்னரான சேவை வலையமைப்பு ஆகியவற்றின் பக்கபலத்துடன் வாடிக்கையாளர்களுக்கு சௌகரியத்தை சிங்கர் வழங்கி வருகின்றது. கல்வி, விளையாட்டு, சுகாதாரப் பராமரிப்பு, சூழல் பாதுகாப்பு மற்றும் ஏனைய பல சமூக செயற்பாடுகள் மூலமாக வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தி, அன்றாடம் பல இலட்சக்கணக்கான இலங்கை மக்களின் வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்தும் வர்த்தக நிறுவனங்கள் மத்தியில் சிங்கர் தொடர்ந்தும் முன்னிலை வகித்து வருகின்றது. அத்தகைய முயற்சிகளுக்காக நிறுவனம் எண்ணற்ற விருதுகளை வென்றுள்ளதுடன், இதற்கு எல்லாம் சிகரம் வைத்தாற் போல, தொடர்ந்து பத்து ஆண்டுகளாக நாட்டில் முதலிடத்திலுள்ள மக்களின் அபிமானத்தை வென்றுள்ள வர்த்தகநாமமாக சிங்கர் திகழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57