வேதிகா நடிக்கும் 'மஹால்' பட தொடக்க விழா

By Digital Desk 5

25 Sep, 2022 | 01:08 PM
image

நடிகை வேதிகா எதிர்மறை நாயகி வேடத்தில் நடித்திருக்கும் நடிக்கவிருக்கும் 'மஹால்' எனும் திரைப்படத்தின் தொடக்க விழா பெங்களூரூவில் சிறப்பாக நடைபெற்றது.

'கோல்மால்' என்னும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகும் பொன். குமரன் இயக்கத்தில் தயாராகவிருக்கும் புதிய திரைப்படம் 'மஹால்'.

இதில் சி. எஸ். கிஷன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக 'தனுசு ராசி நேயர்களே' பட புகழ் நடிகை திஹங்கனா சூரியவன்ஸி நடிக்கிறார். இவருடன் அழுத்தமான எதிர்மறை நாயகி வேடத்தில் நடிகை வேதிகா நடிக்கிறார்.

எஸ். சரவணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு அருள் தேவ் இசை அமைக்கிறார். ஃபேண்டஸி திரில்லர் ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ரியான்சி சினிமாஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எம். நரேஷ் ஜெயின் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' ஃபேண்டஸி ஹாரர் கொமடி வித் திரில்லர் ஜேனரில் 'மஹால்' தயாராகிறது. 500 ஆண்டுக்கு முற்பட்ட காலகட்டத்திய காட்சி ஒன்றும் இடம்பெறுகிறது.

இதில் இளவரசியாக நடிகை திஹங்கனா நடிக்கிறார். படத்தின் கதை இந்திய அளவிலான ரசிகர்களுக்கு ஏற்றதாக இருப்பதால், 'மஹால்' திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தயாராகிறது.'' என்றார்.

இயக்குவர் பொன். குமரன் கன்னடத்தில் ஏராளமான வெற்றி படங்களை அளித்த இயக்குநர் என்பதாலும், தமிழில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'லிங்கா' படத்தின் கதாசிரியர் என்பதாலும், அவரின் இயக்கத்தில் தயாராகும் 'மஹால்' திரைப்படத்திற்கு அறிவிப்பு வெளியான நிலையிலேயே எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்