தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 'திலீபன் வழியில் வருகிறோம்' என்று முன்னெடுக்கப்படுகின்ற ஊர்தி பவனியானது இன்றைய தினம் வடமராட்சிப் பகுதிகளில் பயணித்தது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தின் பொத்துவிலில் ஆரம்பித்த ஊர்தி பவனி, தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கியவாறு பருத்தித்துறை நகருக்குள் இன்று காலை பயணித்தது.
இதன்போது தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு பலரும் அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
பருத்தித்துறையில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் தூபியடியில் அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது.
இந்த ஊர்திப் பவனியானது யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணிக்கவுள்ளதுடன் எதிர்வரும் 26 ஆம் திகதி நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தை வந்தடையும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM