பொருளாதார நெருக்கடியால் பிள்ளைகளை சிறுவர் இல்லங்களில் சேர்க்கும் பெற்றோர்

Published By: Digital Desk 5

24 Sep, 2022 | 01:58 PM
image

பொருளாதார நெருக்கடியினால் பிள்ளைகளை பராமரிக்க முடியாது என தெரிவித்து , சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் பிள்ளைகளை சேர்க்கும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என வடமாகாண  சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. 

வடமாகாணத்தில் பொருளாதார நெருக்கடி காரணமாக பிள்ளைகளை வைத்து பராமரிக்க முடியவில்லை என சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் , சிறுவர் இல்லங்களில் பிள்ளைகளை சேர்க்கும் பெற்றோரின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்திலையே அதிகளவான பிள்ளைகளை பெற்றோர் இவ்வாறு சிறுவர் இல்லங்களில் சேர்த்துள்ளனர். 

வடக்கில் 2021 ஆம் ஆண்டு 158 பிள்ளைகள் அவ்வாறு சேர்க்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு பொருளாதார நெருக்கடி கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தியமையால் இந்த ஆண்டின் அரையாண்டு கால பகுதிக்குள் 246 பிள்ளைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இந்த ஆண்டு யாழ்.மாவட்டத்தில் 124 பேரும் , கிளிநொச்சி மாவட்டத்தில் 62 பேரும் , முல்லைத்தீவு மாவட்டத்தில் 45 பேரும் , மன்னார் மாவட்டத்தில் 07 பேரும் வவுனியா மாவட்டத்தில் 08 பேருமாக 246 பிள்ளைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். 

பொருளாதார நெருக்கடி காரணமாக எம்மால் பிள்ளைகளை பராமரிக்க முடியாதுள்ளது என பெற்றோரால் முன் வைக்கப்படும் கோரிக்கைகளை எமது திணைக்களம் பரிசீலித்து , பெற்றோரின் பொருளாதார நிலைமைகளை அறிந்து உண்மையில் அவர்களால் பிள்ளைகளை பராமரிக்க முடியாதா என்பதனை உறுதிப்படுத்திய பின்னர் வடமாகாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சிறுவர் இல்லங்களில் பிள்ளைகளை சேர்க்க அனுமதிப்போம் என வடமாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு திணைக்கள ஆணையாளர் இ.குருபரன் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08