ஜனாதிபதி ரணில் ஜப்பான் விஜயம்

By Digital Desk 5

24 Sep, 2022 | 12:42 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஞாயிற்றுக்கிழமை (25) ஜப்பானுக்கு விஜயம் மேற்கொள்கிறார்.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதி கிரியைகளில் கலந்துக்கொள்ளும் வகையிலேயே இந்த விஜயம் அமைகின்றது.

இந்த விஜயத்தின் போது  ஜப்பான் பிரதமர் பிமியோ கிஷிடா மற்றும் நிதி அமைச்சர் ஷனுச்சி சுசுகி  ஆகியோரை சந்தித்து கலந்துரையாட உள்ளார்.

இதன் போது கடன் மறுசீரமைப்பு திட்டங்களுக்கான ஒத்துழைப்புகள் குறித்து கூடுதல் அவதானம் செலுத்தவும் இலங்கையில் கைவிடப்பட்ட ஜப்பானிய திட்டங்களை மீள ஆரம்பிப்பது குறித்தும் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட உள்ளது.

இதே வேளை, ஜப்பானிலிருந்து பிலிப்பைன்ஸுக்கும் ஜனாதிபதி செல்ல உள்ளார். பிலிப்பைன்ஸ் தலைநகர் மெனிலாவின் நடைப்பெறவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாட்டில் கலந்துக்கொள்ளும் வகையிலேயே ஜனாதிபதி ரணில் அங்கு செல்கின்றார்.

இந்த மாநாட்டின் பின்னர் ஆசிய அபிவிருத்தி வங்கி குழுமத்தின் தலைமைத்துவம் இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே பொது வெளியில்  இடம்பெற்ற அரசியல் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த நிலையில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

அவரது இறுதி கிரியை அரச மரியாதையுடன் எதிர்வரும் 27 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதில் கலந்துக்கொள்ளும் வகையில் பன்னாட்டு தலைவர்களும் வருகை தரவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கும் கொள்கை...

2022-11-28 16:51:42
news-image

அரசியல் மயமாகியுள்ள வெளிவிவகார அமைச்சை மறுசீரமைக்க...

2022-11-28 21:09:30
news-image

ஊடகத்தை அச்சுறுத்தி எந்த நெருக்கடிக்கும் தீர்வுகாண...

2022-11-28 16:08:41
news-image

யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டாலும் நாட்டில் சமாதானம்...

2022-11-28 15:13:06
news-image

இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி...

2022-11-28 17:19:07
news-image

அரச நிதி தொடர்பான முகாமைத்துவ சட்டத்தை...

2022-11-28 13:30:34
news-image

வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை அங்கேயே...

2022-11-28 21:08:04
news-image

பால் மாவின் விலை அதிகரிக்கிறது!

2022-11-28 21:00:39
news-image

மனித உரிமை ஆணைக்குழுவுடன் மோதி நாட்டை...

2022-11-28 17:04:25
news-image

சமூக ஊடகங்கள் ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா...

2022-11-28 12:40:38
news-image

2023 ஆம் ஆண்டில் கல்விப் பொதுத்...

2022-11-28 19:57:39
news-image

மனித உரிமை விடயத்தில் அரசாங்கம் நழுவிச்செல்லும்...

2022-11-28 19:54:34