சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' பட புதிய பாடல் வெளியீடு

Published By: Digital Desk 5

24 Sep, 2022 | 12:40 PM
image

சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் 'பிரின்ஸ்' எனும் படத்தில் இடம்பெற்ற இரண்டாவது பாடல் வெளியாகி இருக்கிறது.

தெலுங்கு இயக்குநர் கே. வி. அனுதீப் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'பிரின்ஸ்'. இதில் சிவகார்த்திகேயன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக உக்ரேனிய நாட்டு நடிகை மரியா ரியாபோஷப்கா நடித்திருக்கிறார்.

இவர்களுடன் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மனோஜ் பாரஹம்ஸா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு எஸ். தமன் இசையமைத்திருக்கிறார்.

கொமர்ஷல் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல் எல் பி எனும் நிறுவனமும், சுரேஷ் பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனமும், சாந்தி டாக்கீஸ் எனும் நிறுவனமும் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் 'பிம்பிளிக்கி பிளாப்பி..' எனத் தொடங்கும் சிங்கிள் ட்ராக்கும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது இந்தப் படத்தில் இடம்பெற்ற இரண்டாவது பாடல் வெளியாகி இருக்கிறது. 'ஜெசிக்கா ஜெசிக்கா ஜெசிக்கா உன் பாய் ஃப்ரெண்ட் பதவி எனக்கா..' எனத் தொடங்கும் இந்தப் பாடலை றாப் பாடகரும், பாடலாசிரியருமான அறிவு எழுத, இசையமைப்பாளரும், பாடகருமான எஸ். தமன் இசையமைத்து பாடியிருக்கிறார்.

றாப் பாணியில் அமைந்த இந்த பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்தில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

'டாக்டர்', 'டான்' ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் 'பிரின்ஸ்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35