(எம்.மனோசித்ரா)
கொவிட் தொற்றினால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு கொரிய சர்வதேச ஒத்துழைப்புக்கள் முகவர் நிறுவனத்தின் உதவியுடன் நிவாரண நிதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாணம் மற்றும் ஊவா மாகாணங்களில் கொவிட் 19 தொற்று நிலைமையால் பாதிப்புக்குள்ளாகிய சமூகங்களின் சமூகப் பொருளாதாரத் தாங்குதிறனை வலுப்படுத்துவதற்கான கருத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கொவிட்-19 தொற்று நிலைமையால் பாதிப்புக்குள்ளாகிய மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டம் மற்றும் ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டங்களிலுள்ள பெருந்தோட்ட மக்களின் சமூகப் பொருளாதாரத் தாங்குதிறனை வலுப்படுத்துவதற்காக கொரிய சர்வதேச ஒத்துழைப்புக்கள் முகவர் நிறுவனத்தால் நிதி வழங்கும் கருத்திட்டமொன்று திட்டமிடப்பட்டுள்ளது.
2022 தொடக்கம் 2025 ஆம் ஆண்டு வரைக்கான 4 வருடங்கள் உடல்நலம், சுகாதாரம் மற்றும் விவசாயம் போன்ற மூன்று கூறுகளின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ள இக்கருத்திட்டத்தின் மூலம் நுவரெலியா மாவட்டத்தில் 5 பிரதேச செலயகப் பிரிவில் 72,400 பேரும், பதுளை மாவட்டத்தில் 6 பிரதேச செயலகப் பிரிவுகளில் 19,350 பேரும் நேரடியாகப் பயனடைவார்கள்.
கொரிய சர்வதேச ஒத்துழைப்புக்கள் முகவர் நிறுவனத்தால் வழங்குவதற்குத் தீர்மானித்துள்ள 6 மில்லியன் டொலர் பெறுமதியான இக்கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் சார்பாக ஐக்கிய நாடுகளின் மனித குடியமர்த்தல் நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படுவதுடன், அதன் அனைத்து ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கொரிய சர்வதேச ஒத்துழைப்புக்கள் முகவர் நிறுவனம், பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண மற்றும் உள்ளுராட்சி அமைச்சு மற்றும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்திற்கும் இடையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை அறிக்கை ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM