உயர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு

By T Yuwaraj

23 Sep, 2022 | 08:43 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

நீதிமன்றின் உத்தரவை செயற்படுத்தாமல்,  அவமதித்தமை தொடர்பில் விளக்கமளிக்க எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி  மன்றில் ஆஜராகுமாறு பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு  உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ( 23) உத்தரவிட்டது.

உயர் நீதிமன்ற நீதியரசர் பிரியந்த ஜயவர்தன தலைமையிலான  எஸ். துறைராஜா மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோரை உள்ளடக்கிய நீதியரசர்கள் குழாம் இதற்கான உத்தரவை பிறப்பித்தது.

பொலிஸ் மா அதிபருக்கு மேலதிகமாக, சப்ரகமுவ மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  மஹிந்த குணரத்ன,  இரத்தினபுரி மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  ஜே.எஸ். வீரசேகர,  எம்பிலிபிட்டிய வலய சிரேஷ்ட  பொலிஸ் அத்தியட்சர் எம்.என். மென்டிஸ் மற்றும் எம்பிலிபிட்டிய உதவி பொலிஸ் அத்தியட்சர்  டி.கே.ஏ. சனத் குமார ஆகியோரையும் தனிப்பட்ட ரீதியில் மன்றில் அன்றைய தினம் ஆஜராக வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சி.ஐ.டி.யின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகரவுடன் கைது செய்யப்பட்ட சி.ஐ.டி.யின் முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் சுகத் மெண்டிஸ் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பிரகாரம் செயற்பட்டு அவரின் சம்பளம், கொடுப்பணவுகளை வழங்க தவறியதன் ஊடாக நீதிமன்றை அவமதித்தமை தொடர்பில் இந்த ஐவருக்கும் இவ்வாறு நீதிமன்றில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன தொடர்புபட்ட விவகாரத்தில், சி.ஐ.டி.யின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர சாட்சியங்களை சோடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட நிலையில், ஷானி அபேசேகரவுக்கு எதிராக சாட்சியமளிக்க தான் வற்புறுத்தப்பட்டதாகவும் அதனை மறுத்ததால் தான் கைது செய்யப்பட்டதாகவும் கூறி சி.ஐ.டி.யின் முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் சுகத் மெண்டிஸ் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளார். 

அத்துடன் இதனால் தான் கடந்த 2020 ஆகஸ்ட் 3 ஆம் திகதி முதல் பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபரின் குறித்த உத்தரவை வலுவிழக்க செய்யுமாறும் அம்மனு ஊடாக சுகத் மெண்டிஸ் கோரியுள்ளார்.

இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் கடந்த  மே 8 ஆம் திகதி உத்தரவொன்றினை பிறப்பித்தது. அந்த உத்தரவில், பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள உப பொலிஸ் பரிசோதகர் சுகத் மெண்டிஸின் சம்பளத்தை செலுத்துமாறு உத்தரவிடப்பட்டது.

இவ்வாறான நிலையில், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் தனக்கு சம்பளம் இதுவரை செலுத்தப்படவில்லை என,  உப பொலிஸ் பரிசோதகர் சுகத் மெண்டிஸ் சார்பில் அவரது சட்டத்தரணி, சிரேஷ்ட சட்டத்தரணி விரான் கொரயாவினால் நகர்த்தல் பத்திரம் ஊடாக உயர் நீதிமன்றுக்கு  கடந்த 21 ஆம் திகதி புதன் கிழமை அறிவிக்கப்பட்டது.

அந்த நகர்த்தல் பத்திரத்தை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான  மூவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் ஆராய்ந்தது. 

இதன்போது மன்றில் விடயங்களை முன் வைத்த  சிரேஷ்ட சட்டத்தரணி விரான் கொரயா,  கடந்த மூன்று வருடங்களாக தனது சேவை பெறுநர் சம்பளம் இன்றி பெரும் துயரங்களை எதிர் கொள்வதாகவும், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் சம்பளத்தை வழ்னக்க இதுவரை பிரதிவாதிகள் நடவடிக்கை எ டுக்கவில்லை எனவும் குறிப்பிட்டார். அதனால் நீதிமன்றம் அவமதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்ட்டிக்காட்டினார்.

 இந் நிலையிலேயே குறித்த நகர்த்தல் பத்திரம் தொடர்பில் தீர்மானம் எடுக்க பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய ,   நீதியர்சர் பிரியந்த ஜயவர்தன தலைமையிலான மூவர் கொண்ட நீதியரசர்கள் முன்னிலையில் அதனை விசாரணைக்கு எடுக்க உத்தரவிட்டார்.

அடிப்படை உரிமை மீறல் மனுவில் பிரதிவாதிகளுக்காக ஆஜரான சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத்துக்கு,  குறித்த மனுவின் நகர்த்தல் பத்திரம் தொடர்பில் ஆட்சேபனை முன் வைக்க வியாழக்கிழமை ( 22) பிற்பகல் 2.30 மணி வரை அவகாசமும் உயர் நீதிமன்றால் வழங்கப்பட்டிருந்த பின்னணியிலேயே வெள்ளிக்கிழமை ( 23) குறித்த நகர்த்தல் பத்திரம் மீதான பரிசீலனை நடந்தது.

 இதன்போதே உயர் நீதிமன்றம், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட  உயர் பொலிஸ் அதிகாரிகளை  எதிர்வரும் நவம்பர் 16 இல் உயர் நீதிமன்றில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மினுவாங்கொடை முக்கொலை ; இதுவரை 6...

2022-10-07 10:12:27
news-image

13 வயது சிறுமியை வன்புணர்ந்து கர்ப்பமாக்கிய...

2022-10-07 10:41:26
news-image

உருவானது அம்மான் படையணி ! 

2022-10-07 10:27:46
news-image

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய...

2022-10-07 09:41:14
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-10-07 08:38:12
news-image

உலக நாடுகள் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள்; சர்வதேச...

2022-10-07 08:10:22
news-image

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தாவிடின் நாடு பாரிய நெருக்கடிக்குள்...

2022-10-06 18:47:07
news-image

ஊழல் அரசியல்வாதிகளை விரட்டியடிக்க நாட்டு மக்கள்...

2022-10-06 18:37:34
news-image

ஜனாதிபதி ரணிலை பணயக்கைதியாக வைத்திருக்கவில்லை -...

2022-10-06 22:00:05
news-image

நாட்டு மக்களை மீண்டும் ஏமாற்றக் கூடாது...

2022-10-06 18:35:17
news-image

அரச வரப்பிரசாதங்களை அனுபவிக்காது வெளியேறுங்கள் -...

2022-10-06 18:45:23
news-image

ஜனாதிபதி, பிரதமரின் காரியாலயங்களுக்கு ஒருசிலரை அழைத்து...

2022-10-06 19:04:39