கேரளா கஞ்சாப் பொதிகளைக் கடத்த முற்பட்ட இருவர் கடற்படையினரால் கைது

By Digital Desk 5

23 Sep, 2022 | 04:39 PM
image

இலந்தையடி பகுதியிலிருந்து கேரளா கஞ்சாப் பொதிகளை இரண்டு சொகுசு கார்களில் கடத்திச் செல்ல முற்பட்டபோது கற்பிட்டி விஜய கடற்படையினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர். 

கேரளா கஞ்சா கடத்திச் செல்வதாக கற்பிட்டி விஜய கடற்படைப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய இன்று (23) அதிகாலை நுரைச்சொல்லைப் பகுதியில் வைத்து குறித்த சுற்றுவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது 8 உரைப்பைகளில் பொதி செய்யப்பட்ட 165 கிலோ கிராம் 460 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றபட்டதுடன் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கற்பிட்டி விஜய கடற்படையினர் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் ராகம பகுதிகளை சேர்ந்தவர்களென அடையாளம் காணப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன், கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு சொகுசு கார்கள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நுரைச்சோலைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

சந்தேக நபர்களிடமிருந்து தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் புத்தளம் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக நுரைச்சோலைப் பொலிஸார் இதன்போது தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-09-30 08:58:20
news-image

நாட்டின் சில பகுதிகளில் மழை அதிகரிக்கும்

2022-09-30 09:07:13
news-image

திருடர்களை பாதுகாக்கும் அமைப்பே தேசிய சபை...

2022-09-29 21:45:55
news-image

" தற்போதைய அடக்குமுறைகள் மனித உரிமைகள்...

2022-09-29 16:37:02
news-image

மனித உரிமை பேரவையின் தீர்மானம் நியாயமற்றது...

2022-09-29 21:21:18
news-image

பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்த அவதானம்...

2022-09-29 15:11:35
news-image

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலம்...

2022-09-29 21:25:13
news-image

ஜனாதிபதி நாடு திரும்பியதும் அதி உயர்...

2022-09-29 21:19:57
news-image

தேசிய கொள்கை மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை...

2022-09-29 21:54:43
news-image

பின்தங்கிய கிராமங்களில் கர்ப்பிணித்தாய்மார்களுக்கு குருதிச்சோகை -...

2022-09-29 21:22:50
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும்...

2022-09-29 21:25:57
news-image

அடையாள அணிவகுப்பைக் கோரிய பொலிசார் ;...

2022-09-29 21:56:10