(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)
எலிசபெத் மகாராணி ஒரு கிறிஸ்தவர் என்ற போதிலும் இலங்கையின் பௌத்த மதத்தை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். அத்துடன் அவர் இலங்கையுடன் மிகவும் சமீபமாக இருந்துவந்தார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23)இடம்பெற்ற இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவு தொடர்பான அனுதாப பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிகையில்,
இரண்டாம் எலிசபெத் மகாராணி இலங்கையுடன் மிகவும் சமீபமாக காணப்பட்டார். நான் ஜனாதிபதியாக பதவிக்கு வந்த பின்னர் கிடைத்த வாழ்த்துச் செய்திகளில் எலிசபெத் மகாராணியிடம் இருந்து கிடைத்த வாழ்த்து மிக முக்கியமானது.
அவரது இந்த வாழ்த்துச் செய்தி, மகாராணியின் கடிதங்களில் இறுதியாக மாறியது. மகாராணி இறப்பு இந்தளவு விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கவில்லை.
மகாராணி இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரித்தானியாவின் புதிய பிரதமருடன் அவரை தொலைக்காட்சியில் காணமுடிந்தது. அவர் சிறிது சோர்வாக இருப்பதை அதில் காண முடிந்தது.
எவ்வாறாயினும் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் தற்போதைய பிரதமர் லிட்ஸ் ட்ரஸ் ஆகியோருடன் ஒரு நாளில் அரை நாளை செலவிடும் எவரும் சோர்வடைவார்கள். இதனால், மகாராணி சோர்வடைந்தது ஆச்சரியத்திற்குரியது அல்ல.
மகாராணியின் ஆட்சிக்காலத்தில் நாடு சிலோன் என்ற நிலையில் இருந்து இலங்கை (ஸ்ரீலங்கா) என்ற நிலை வரை பரிணாமம் பெற்றது.
1956 தேர்தல் வெற்றி, இனப்பிரச்சினை, இலவச கல்வி, பொருளாதாரத்தை அரசுடமையாக்கியமை ஆகிய இலங்கையில் நடந்த பிரதான அரசியல் சம்பவங்கள் மகாராணியின் ஆட்சியின் கீழ் ஆரம்பமானது.
எலிசபெத் மகாராணி ஒரு கிறிஸ்தவர் என்ற போதிலும் 1815 ஆம் ஆண்டு கண்டி உடன்படிக்கையின் அடிப்படையில் இலங்கையின் பௌத்த மதத்தை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டார் என்றார்.
இதன்போது பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவிக்கையில்,
இலங்கை மக்களுக்கா இரண்டாம் எலிசபெத் மகாராணி அளப்பரிய சேவை செய்துள்ளார். பிரித்தானியா தனது தாயை இழந்துள்ளது. அவரது இறுதிக்கிரியைக்கு இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதி கலந்துகொண்டமை முக்கியமான சிறப்பம்சமாகும்.
பொதுநலவாய மாநாடுகளின் தலைவராக பதவி வகித்தவர், பொதுதுநலவாய அமைப்புகளுடன் இணைந்து நாமும் எமது அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அத்துடன் அவரது புதல்வரான மூன்றாவது சார்ள்ஸ் மன்னருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். மறைந்த மகாராணியின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம் என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிக்கையில்,
இரண்டாம் எலிசபெத் மகாராணி அவரது நாட்டுக்கு பாரிய சேவை செய்திருக்கின்றார். அவரது தியாகத்தை நாங்கள் மதிக்கின்றோம். பொதுநலவாய நாடுகளுடன் இணைந்து அவர் மேற்கொண்ட சேவையை மதிக்கின்றோம்.
காலனித்துவ காலத்தில் இருந்து பிரச்சினைகள் காணப்பட்டாலும் பின்னர் இணைந்து செயற்பட்டிருக்கின்றாேம். காலனித்துவத்தின்போது இடம்பெற்ற விடயங்களை நாங்கள் மறைக்கவோ மறக்கவோ முடியாது. பிரித்தானியாவி காலனித்துவத்தின் கீழ் பல நாடுகள் இருந்து வந்துள்ளன.
அதன் பின்னர் பொதுநலவாய நாடுகளுடன் இணைந்து நாங்கள் இணைந்து செயற்பட்டிருக்கின்றோம். அவரின் மறைவால் பிரித்தானியா மக்கள் மிகவும் கவலையுற்றிருக்கின்றார்கள்.
எனவே அவரின் மறைவால் கவலையுற்றிருக்கும் அவரது புதல்வரான மூன்றாவது சார்ள்ஸ் மன்னர் உட்பட ராேயல் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். மறைந்த மகாராணியின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM