(ஆர்.வி.கே.) 

யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியிலுள்ள வீடொன்றில் பூச்சாடியில் வளர்த்த 3 கஞ்சா செடியினை யாழ். பொலிஸ் நிலையப் பொலிசார் கைப்பற்றியதோடு சந்தேக நபர் ஒருவரையும் கைதுசெய்துள்ளனர்.

யாழ். மணியந்தோட்டம் பகுதியிலுள்ள வீடொன்றில் பூச்சாடியில் கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் நேற்று மாலை    யாழ்ப்பாணம்  பொலிசார் தேடுதல் நடாத்தினர்.

இதன்போது குறித்த வீட்டினின் ஓர் பூச்சாடியில் வளர்த்த 3 கஞ்சா செடிகளையும் பொலிசார் கைப்பற்றினர்.

கஞ்சா செடிகளை கைப்பற்றியதோடு அவ்வீட்டில் இருந்த சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.