மே 9 வன்முறை நாடளாவிய ரீதியில் வியாபிக்க பாதுகாப்புத் தரப்பினரே காரணம் - இராஜாங்க அமைச்சர் டி.பி ஹேரத்

By Vishnu

23 Sep, 2022 | 04:12 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)

மே 09 காலி முகத்திடல் களத்தில் இடம்பெற்ற தாக்குதல் பாதுகாப்பு தரப்பினரது பொறுப்பற்ற செயற்பாட்டினாலேயே   நாடு முழுவதும் வியாபித்தது.

பொறுப்புக் கூற வேண்டிய பாதுகாப்பு தரப்பினருக்கு எதிராக இதுவரை எந்நடவடிக்கையும் எடுக்காமலிருப்பது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என இராஜாங்க அமைச்சர் டி.பி ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றில் இன்று (23) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரலவின் மறைவின் மீதான ஒத்திவைக்கப்பட்ட அனுதாப பிரேரணை மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், 

ஜனநாயகத்தின் மறு உருமாக கருதப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல படுகொலை செய்யப்பட்டமை ஜனநாயகத்துக்கு பேரிழப்பாகும்.

மே மாதம்09 ஆம் திகதி நாட்டில் ஜனநாயகம் முடக்கப்பட்டு பயங்கரவாதம் பலம் பெற்றது.குறுகிய நேரத்திற்குள் 74 பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டு அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் மீது மிலேட்சத்தனமான தாக்கதல்கள்  முன்னெடுக்கப்பட்டன.

மே மாதம் 09ஆம் திகதி பாதுகாப்பு தரப்பினர் தங்களின் கடமையை முறையாக செயற்படுத்தியிருந்தால் பாரதூரமான விளைவுகள் ஏற்பட்டிருக்காது,அமரகீர்த்தி அதுகோரலவையும் இழக்க நேரிட்டிருக்காது.நாட்டு மக்களின் உயிர் மற்றும் சொத்துக்களை பாதுகாக்கும் பொறுப்பு இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு உண்டு.

மே மாதம் 09ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்ற வன்முறை தாக்குதலின் பொது பாதுகாப்பு தரப்பினர் குறைந்தப்பட்ச அதிகாரத்தை பயன்படுத்தியிருந்தால் நாடு முழுவதும் வன்முறை வியாபித்திருக்காது.

எவரின் தேவைக்காக பாதுகாப்பு தரப்பினர் பொறுப்பற்ற வகையில் அமைதியாக இருந்தார்கள் என்பது கேள்விக்குறியது.

இச்சம்பவம் தொடர்பில் ஆராய முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் ரொஷான் குணதிலக ஆகியோர் தலைமையில் குழு நியமிக்கப்பட்டது.

பாதுகாப்பு தரப்பினர் தமது கடமைகளை நிறைவேற்றவில்லை என குழு அறிக்கை சமர்ப்பித்தது.இருப்பினும் பொறுப்புக் கூற வேண்டிய பாதுகாப்பு தரப்பினருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமலிருப்பது பாதுகாப்பு தரப்பினரது பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்தியுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு ஜப்பான் ஆதரவளிக்கும்...

2022-09-27 09:45:12
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-09-27 09:29:04
news-image

வங்கிக் கொள்ளை : பொதுஜன பெரமுனவின்...

2022-09-27 09:28:04
news-image

நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்

2022-09-27 08:59:44
news-image

சீன கம்யுனிஸ்ட் கட்சியின் மாநாட்டின் பின்னர்...

2022-09-27 08:41:02
news-image

வெளிநாட்டு வேலைவாய்ப்பு குறித்து அமைச்சர் மனுஷ...

2022-09-26 21:29:12
news-image

மஹிந்த தலைமையில் புதிய அரசியல் கூட்டணி...

2022-09-26 18:39:29
news-image

இலங்கை அரசாங்கத்தின் போக்கை அடக்குமுறைகள் மீளுறுதிப்படுத்துகின்றன...

2022-09-26 21:10:02
news-image

'அதியுயர் பாதுகாப்பு வலய' உத்தரவு சட்டத்திற்கும்...

2022-09-26 20:54:52
news-image

சட்டத்தின் பிரகாரமே ஆர்ப்பாட்டங்கள் கலைக்கப்படுகின்றன -...

2022-09-26 18:48:01
news-image

சிறுவர் நலனை முன்னிறுத்திய நடவடிக்கைகளுக்கு முழுமையான...

2022-09-26 21:24:17
news-image

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு பிரிட்டன்...

2022-09-26 18:44:11