அஜித் குமார் நடிக்கும் 'துணிவு' படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

By Vishnu

23 Sep, 2022 | 04:02 PM
image

தமிழ் திரையுலகின் வசூல் சக்கரவர்த்தியும், முன்னணி நட்சத்திர நடிகருமான அஜித்குமார் நடிப்பில் தயாராகி வரும் புதிய திரைப்படத்திற்கு துணிவு' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

' நேர்கொண்ட பார்வை', 'வலிமை' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய படம் 'துணிவு'. இதில் அஜித்குமார்  இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அவருடன் மலையாள நடிகை மஞ்சு வாரியர் அழுத்தமான வேடத்தில் நடிக்கிறார். 

இவர்களுடன் சமுத்திரகனி, யோகி பாபு, பிரேம் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை பே வியூ ப்ராஜெக்ட்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர் போனி கபூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தில் இறுதி கட்ட படப்பிடிப்பு விரைவில் தாய்லாந்து நாட்டில் தொடங்குகிறது. இந்நிலையில் படத்திற்கு 'துணிவு' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. 

ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர் அஜித்குமார், கையில் நவீன ரக ஆயுதத்தை வைத்துக்கொண்டு ஓய்வெடுப்பது போல் தோற்றமளிப்பதும், செகண்ட் லுக்கில்  அர்த்தமுள்ள பார்வையுடன் தோற்றமளிப்பதும் என இரண்டு வித தோற்றங்களும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருக்கிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வேதிகா நடிக்கும் 'மஹால்' பட தொடக்க...

2022-09-25 13:08:17
news-image

மனச்சோர்வுக்கு மருந்தாகும் 'நித்தம் ஒரு வானம்'

2022-09-24 13:59:10
news-image

சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' பட புதிய பாடல்...

2022-09-24 12:40:53
news-image

குழலி - விமர்சனம்

2022-09-23 16:37:54
news-image

அஜித் குமார் நடிக்கும் 'துணிவு' படத்தின்...

2022-09-23 16:02:32
news-image

பூஜையுடன் தொடங்கிய தனுஷின் 'கேப்டன் மில்லர்'

2022-09-23 11:21:04
news-image

தனுஷின் 'வாத்தி' வெளியீட்டுத் திகதி அறிவிப்பு

2022-09-21 11:54:53
news-image

தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தில் இணைந்த...

2022-09-18 14:05:47
news-image

அஞ்சலியின் 'ஃபால்' வலைத்தள தொடரின் ஃபர்ஸ்ட்...

2022-09-17 12:41:18
news-image

அதர்வாவை 'ஜூனியர் கேப்டன்' என புகழாரம்...

2022-09-17 12:03:03
news-image

வெந்து தணிந்தது காடு = திரை...

2022-09-16 13:57:35
news-image

உதயநிதி ஸ்டாலினின் 'மாமன்னன்' படபிடிப்பு நிறைவு

2022-09-14 20:20:22