பணவீக்கம் 70.2 சதவீதமாக உயர்வு

By Digital Desk 5

23 Sep, 2022 | 03:58 PM
image

(நா.தனுஜா)

தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெணுக்கு அமைவாக மதிப்பிடப்படும் நாடளாவிய ரீதியிலான பணவீக்கம் கடந்த ஜூலை மாதம் 66.7 சதவீதமாகப் பதிவாகியிருந்த நிலையில், அது ஓகஸ்ட் மாதத்தில் 70.2 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.

உணவு மற்றும் உணவல்லாப்பொருட்களின் மாதாந்த விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பினால் இவ்வாறு பணவீக்கம் உயர்வடைந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை மத்திய வங்கி, கடந்த ஜுலை மாதம் 82.5 சதவீதமாகக் காணப்பட்ட உணவுப்பணவீக்கம் ஓகஸ்ட் மாதத்தில் 84.6 சதவீதமாகவும், கடந்த ஜுலை மாதம் 52.4 சதவீதமாகக் காணப்பட்ட உணவல்லாப்பணவீக்கம் ஓகஸ்ட் மாதத்தில் 57.1 சதவீதமாக அதிகரித்திருந்ததாகவும் தெரிவித்துள்ளது.

கடந்த ஜுலையில் உடன் மீன், முட்டை, பிஸ்கட்டுகள், பழங்கள் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் மற்றும் வீடமைப்பு, நீர், மின்சாரம், எரிவாயு, எரிபொருள், தளபாடங்கள், வீட்டுச்சாதனங்கள், சவர்க்காரம் போன்ற வழமையான வீட்டுப்பராமரிப்புப்பொருட்கள் உள்ளிட்ட உணவல்லாப்பொருட்கள், சேவைகளின் விலைகள் மற்றும் கட்டணங்களில் முறையே 0.91 மற்றும் 1.53 சதவீத அதிகரிப்பு அவதானிக்கப்பட்டமையை அடுத்து, தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெணில் ஏற்படக்கூடிய மாதாந்த மாற்றம் கடந்த மாதம் 2.45 சதவீதமாகப் பதிவானது. எனவே தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெணை அடிப்படையாகக்கொண்டு கணிப்பிடப்படும் பணவீக்கத்திலும் மேற்குறிப்பிட்டவாறான அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த 1952 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பழைய முறைமையை அடிப்படையாகக்கொண்ட கணிப்பீட்டின் பிரகாரம் கடந்த 2007 ஆம் ஆண்டில் பணவீக்கமானது 30 சதவீதம் வரை உயர்வடைந்தது. இருப்பினும் 2002 ஆம் ஆண்டை அடியாண்டாகக்கொண்டு புதிய விலைச்சுட்டெண் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் பணவீக்கம் ஒற்றை இலக்கத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் ஏற்கனவே நடைமுறையிலிருந்த கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் கொழும்பை மாத்திரமே கருத்திலெடுத்திருப்பதாகக்கூறி, கடந்த 2019 ஆம் ஆண்டில் தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு

2022-10-07 10:52:21
news-image

நாவலப்பிட்டியில் துப்பாக்கி, வெற்றுத்தோட்டாக்களுடன் ஒருவர் கைது

2022-10-07 10:49:00
news-image

மினுவாங்கொடை முக்கொலை ; இதுவரை 6...

2022-10-07 10:12:27
news-image

தேசிய சபையின் கூட்டத்தில் இரண்டு உப...

2022-10-07 10:45:59
news-image

13 வயது சிறுமியை வன்புணர்ந்து கர்ப்பமாக்கிய...

2022-10-07 10:44:53
news-image

உருவானது அம்மான் படையணி ! 

2022-10-07 10:27:46
news-image

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய...

2022-10-07 09:41:14
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-10-07 08:38:12
news-image

உலக நாடுகள் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள்; சர்வதேச...

2022-10-07 08:10:22
news-image

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தாவிடின் நாடு பாரிய நெருக்கடிக்குள்...

2022-10-06 18:47:07
news-image

ஊழல் அரசியல்வாதிகளை விரட்டியடிக்க நாட்டு மக்கள்...

2022-10-06 18:37:34
news-image

ஜனாதிபதி ரணிலை பணயக்கைதியாக வைத்திருக்கவில்லை -...

2022-10-06 22:00:05