வருடத்தில் அத்தனை நாட்களும் நினைவேந்தல் நடத்தப்பட வேண்டும் - அருட்தந்தை சக்திவேல்

Published By: Dinesh Silva

23 Sep, 2022 | 02:44 PM
image

தமிழர் தாயகத்தை மீட்க களப்பலியானவர்களுக்காகவும், உயிர்த்தியாகமானோருக்காகவும் வருடத்தில் அத்தனை நாட்களும் நினைவேந்தல் நடத்தப்பட வேண்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அருட்தந்தை மா.சத்திவேல் இன்று (23) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

திலீபன் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக நடந்து கொண்டிருக்கின்றன. அவர் என்ன கோரிக்கைகளை முன் வைத்து உயிர் தியாகமானாரோ அந்தக் கோரிக்கைகள் அன்றும் நிறைவேற்றப்படவில்லை. 

இன்றும் நிறைவேற்றப்படாத மட்டுமல்ல தமிழர் தாயகத்தின் திருகோணமலை திருகோணேஸ்வர கோவில் பிரதேசத்தையும், குருந்தூர் மலை பிரதேசத்தையும் ஆக்கிரமிக்கும் செயற்பாடு ஐ.நா மனித உரிமை பேரவை நடத்திக் கொண்டிருக்கின்ற கால சூழ்நிலையிலும் தொடர்ந்து கொண்டிருப்பது ஒட்டுமொத்த இன அழிப்பிற்குமான பொது கட்டமைப்பு உருவாக்கத்தின் தேவையை உணர்த்தி நிற்கின்ற சூழ்நிலையில் திலீபன் நினைவு சுடர் ஏற்றும் பொது கட்டமைப்பு என ஒரு சிலரை கூட்டுவது நினைவேந்தலுக்கு மட்டுமல்ல தமிழர் தியாகத் தீபம் திலீபனுக்கே அவமானத்தையே ஏற்படுத்தும். 

தமிழர் தாயகத்தை மீட்க களப்பலியானவர்களுக்காகவும், உயிர்த்தியாகமானோருக்காகவும் வருடத்தில் அத்தனை நாட்களும் நினைவேந்தல் நடத்தப்பட வேண்டும்.

புத்தர் "மரணம் நிகழாத வீட்டில் எள்ளு கொண்டு வருமாறு" கேட்டார். மரணம் நிகழாத வீடுகளே இல்லாத போல் யுத்த காலத்தில் இரத்த ஆறு ஓடாத தமிழர் கிராமங்களே இல்லை. மரண ஓலம் கேட்காத நாட்களும் இல்லை.

இந்நிலையில் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு என்பது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், மாவீரர் நாள் நினைவேந்தல், புனித நவாலி நினைவேந்தல், நாகர்கோவில், செஞ்சோலை அனைத்திற்கும் அனைத்து மக்களையும், அனைத்து ஊர்களையும் இணைத்து உருவாக்குதல் வேண்டும். இத்தகைய நினைவேந்தல்கள் அவர்ஊருக்கும் ஊரவர்களுக்கும் மட்டும் சொந்தமானதல்ல.

உதாரணமாக முள்ளிவாய்க்கால் நிலைவேந்தல் முள்ளிவாய்க்கால் மக்களுக்கு மட்டும் சொந்தமானது. அதேபோல் திலீபன் நினைவேந்தல் யாழ் மாநகர சபைக்கு மட்டும் சொந்தமானதாக்கவும் கூடாது.

அமைக்க நினைக்கும் பொது கட்டமைப்பு பிரதான நினைவேந்தல் சார்பாகவும் தமிழர் தாயகத்தை உள்ளடக்கியதாகவும் உருவாக்க வேண்டும்.

பிரதேச ரீதியில் நடத்தும் நினைவேந்தல்களை கிரகமாக நடத்துவதற்கும் பொது நினைவேந்தல்களை வழி நடாத்துவதற்கும் பொது கட்டமைப்பு செயல்பட வேண்டும் அதன் மூலமே தமிழர் தாயகத்தை நினைவேந்தல் ரீதியிலும், அரசியல் ரீதியிலும் உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும்.

தமிழர்களின் விடுதலை காண அனைத்து ரத்தம் சிந்துதல்களிலும் திலீபனின் கோரிக்கை அடங்கியுள்ளது. அதனை இன்றைய நிலையில் அரசியல் ரீதியில் கூர்மைமைப்படுத்தி மக்களை திரட்சி கொள்ள செய்தல் வேண்டும். இதற்கு பிரதேச நினைவேந்தல்கள் முக்கியம். அதுவே முழுமையான பொது நினைவேந்தலுக்கு பெரும் சக்தியாக அமையும்.

ஆனால் நினைவேந்தல் காலத்தில் மட்டும் பொதுக் கட்டமைப்பு பற்றி சிந்திப்பதும், கூட்டம் கூடுவதும், அதனை தனிப்பட்ட அரசியலாக்குவதும், நித்திரை விழித்தவர்கள் போல் பிதற்றுவதும் இன அழிப்பாளர்களின் கைக்கூலி செயற்பாடாகும். இது அனைத்து களப்பலியானோர்க்கும் உயிர்த்தியாகமானோருக்கு செய்யும் துரோகம் மட்டுமல்ல தமிழரின் அரசியலுக்கும் தியாக தீபம் திலீபனுக்கும் செய்யும் துரோகமாகவும் அமையும்.

ஐ.நா மனித உரிமை பேரவையும் அதன் உறுப்பு நாடுகளும் தமது புவிசார் அரசியல் நலன் கருதி தமிழர்களுக்கு எதிராக மிக நீண்ட காலமே துரோகம் செய்து வந்துள்ளது என்பதை நாம் அறிவோம். இதனை தோற்கடிக்க பொது கட்டமைப்பு தேவையாக உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு பொது கட்டமைப்பு தொடர்பாக சிந்தித்தல் வேண்டும் ஏற்கனவே. எழுத தமிழ் உருவாக்கப்பட்டு தனிநபரானதை நினைவில் கொண்டு தியாகி திலீபனின் தியாக நாளில் அரசியல் அறம் கருதி சுடர் ஏற்றி தமிழ் தேசியத்திற்காய் உறுதி கொள்வோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22